பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் அக்கறையுள்ள சூழலை வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதுகாப்பாக உணர வேண்டும். வன்முறை, அச்சுறுத்தல், துன்புறுத்தல், பேரழிவுகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதே "பாதுகாப்பு" என்று NCPCR ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
புதிய விதியின்படி, அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், லாபிகள் மற்றும் நடைபாதைகள், மாடிப்படிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், உணவகம், ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம், பிற திறந்தவெளி பகுதிகள் ஆகிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளில் கேமராக்கள் பொருத்தப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.