அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 1963-ல் மூடப்பட்ட அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது சுற்றுலாத்தலமாக உள்ள இந்த சிறை, மிகவும் கொடூரமானது.
உலகின் மிகக் கொடூரமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான சிறைச்சாலை அல்காட்ராஸ். இங்கிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. தப்பித்தாலும் சுறாக்களுக்கு இரையாக நேரிடும்.
25
அல்காட்ராஸ்: வரலாறு
சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் அமைந்துள்ள அல்காட்ராஸ் முன்பு ஒரு கோட்டையாக இருந்தது. பின்னர் ராணுவ சிறைச்சாலையாகவும், 1934-ல் கூட்டாட்சி சிறைச்சாலையாகவும் மாற்றப்பட்டது.
35
அல்காட்ராஸ்: சிறைச்சாலை அமைப்பு
மூன்று மாடிக் கட்டடமான அல்காட்ராஸ், மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகக் கருதப்பட்டது. குளிர்ந்த நீர், கடல் நீரோட்டங்கள் மற்றும் சுறாக்கள் தப்பிப்பதை இயலாததாக்கின.