இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்! ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை! யாருக்கு சாதகம்?

Published : May 05, 2025, 01:32 PM IST

இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

PREV
14
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்! ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை! யாருக்கு சாதகம்?

UN Security Council to discuss India-Pakistan issue: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்த இந்தியா, அந்நாட்டுடன் செய்து கொண்ட சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தானியர்களை நாட்டில் இருந்து வெளியேற்றியது. மேலும் பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது.

24
ஆதரவு திரட்டும் பாகிஸ்தான்

பதிலுக்கு இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், 'இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்' என பூச்சாண்டி காட்டி வருகிறது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ''சிந்து நதி நீர் ஒப்பந்ததை ரத்து செய்தது போரைத் தூண்டும் செயல்'' என புலம்பித் தவித்து வருகிறது. சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறது.

34
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஆனால் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்பட பெரும்பாலான நாடுகள் இந்தியா பக்கம் உள்ள நிலையில், இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 'இந்தியா சிந்து நதி நீரை தரா விட்டால் ஐநாவிடம் சென்று நியாயம் கேட்போம்' என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. தற்காலிக அதலைவர் கிரீஸ் நாட்டை சேர்ந்த எவாஞ்சலோஸ் செகெரிஸ் தலைமையில் இந்த கூடட்ம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பஹல்காம் விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உள்ளன. மிக முக்கியமாக, இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது குறித்து பாகிஸ்தான் புகார் அளிக்க உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து விடுவதாக ஆதாரத்துடன் கூறி வரும் நிலையில், அது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் முன்பு எடுத்து வைக்க உள்ளது. 

44
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்கள் யார்?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் வீட்டோ (veto-wielding members) உறுப்பினர்களாக‌ உள்ளன. அல்ஜீரியா, டென்மார்க், கிரீஸ், கயானா, பாகிஸ்தான், பனாமா, தென் கொரியா, சியரா லியோன், ஸ்லோவேனியா மற்றும் சோமாலியா ஆகிய 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இல்லை.

ஆனாலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புகார் அளித்தாலும், நமது நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்தியாவுக்கு எல்லையில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories