வரலாறே காணாத சம்பவம்!.. நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி, சிரியா, இத்தாலி - 500 பேர் பலி!

First Published Feb 6, 2023, 3:56 PM IST

துருக்கி - சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்று துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!

நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்  கட்டிடங்களில்  தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!

துருக்கியில் 284 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,323 காயமடைந்துள்ளதாக துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க..மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே

click me!