தாலிபன் அடாவடியின் உச்சம்! ஆப்கனில் பெண் பொம்மைகளுக்கும் கட்டுப்பாடு!

First Published | Jan 21, 2023, 2:08 PM IST

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்பட்டுவரும் தாலிபன் அரசு, இப்போது துணிக்கடைகளில் பெண் பொம்மைகளின் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் திரும்பப் பெறப்பட்டன. இதனால், தாலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றினர்.

அதுமுதல் தாலிபன் அரசு பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்குகான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பர்தா அணியாமல் வெளியே நடமாடத் தடை, உயர்கல்வி மேற்கொள்ள தடை, வாகன லைசென்ஸ் பெற தடை என்று பல கட்டுப்பாடுகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Tap to resize

இப்போது, துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் ஆப்கனில் உள்ள ஜவுளிக்கடைகளில் போஸ் கொடுக்கும் பெண் பொம்மைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்பு பெண் பொம்மைகளையே வைக்கக்கூடாது என்று சொன்னார்கள். இப்போது முகத்தை மட்டும்தான் மறைக்கச் சொல்வது பரவாயில்லை என்று தோன்றுகிறது என துணிக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண் பொம்மைகள் முகம் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், தாலிபன்களின் இந்த அடாவடியான பெண் விரோத கெடுபிடிகளுக்கு உலக அளவில் எதிர்ப்புக் குரல் ஒலிக்கிறது.

Latest Videos

click me!