Prajakta Koli: உலக பொருளாதார மாநாட்டில் 'வைரல் குயின்' பிரஜக்தா கோலி!

First Published | Jan 18, 2023, 5:56 PM IST

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாட்டில் மெக்சிகோ, இந்தியா, பிரேசில், கானா, இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு யூடியூப் பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

பிரேசிலைச் சேர்ந்த நதாலியா அர்குரி தனது யூடியூப் சேனலின் மூலம் பெண்களுக்கு பொருளாதார கல்வி வழங்கிவருகிறார். பொருளாதாரம் தொடர்பான பொழுதுபோக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனமான Me Poupe க்கு தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

அடானா ஸ்டெய்நேக்கர் பத்து வருடங்களுக்கு மேலாக யூடியூப் சேனல் நடத்திவருபவர். நைஜீரிய மருத்துவரான இவர் தற்போது லண்டனில் வசிக்கிறார். தனது ஹவுஸ் ஆப் அடானா (House of Adanna) சேனலில் குடும்பம் மற்றும் சுகாதார பராமரிப்பு சார்ந்த வீடியோக்களை வழங்கிவருகிறார்.

Latest Videos


லூயிஸ் வில்லார் என்பவர் ஆன்லைனில் லூயிசிடோ கம்யூனிகா என அறியப்படுகிறார். மெக்சிகோவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பியானோ பாடங்களை யூடியூபில் பதிவு செய்தார். பின்னால் இவரது பயணம் சார்ந்த வீடியோக்கள் பிரபலமாயின. தனது பதிவுகளில் வெவ்வேறு கலாசாரங்கள் பற்றிய பார்வைகளை முன்வைப்பர்.

கானாவைச் சேர்ந்த வோடெமயா என்பவர் ஆப்பிரிக்காவின் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்த வீடியோ பதிவுகளை வெளியிடுபவர். பிராந்திய தலைவர்கள் பலருடன் இவர் நிகழ்த்திய நேர்காணல்களும் இவருக்கு புகழ் ஈட்டித் தந்தன.

நுசீர் யாசின் என்ற அரபு-இஸ்ரேலியர் தனது சுருக்கமான ஒரு நிமிட வீடியோக்களுக்காகப் புகழ் பெற்றவர். நாஸ் டெய்லி (Nas Daily) என்ற தனது யூடியூப் சேனலில் ஆக்கபூர்வமான கதைகள் மற்றும் புத்திசாலித்தனமான தீர்வுகளைச் சொல்லிவருகிறார்.

பிரஜக்தா கோலி மோஸ்ட்லி சேன் (MostlySane) என்ற யூடியூப் சேனலி் பங்களிப்பாளராக இருக்கிறார். இந்தச் சேனல் இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் மிகப் பிரபலமான யூடியூப் சேனல் ஆகும். பிரஜக்தா ‘வைரல் குயின்’, ‘ஆண்டின் சிறந்த யூடியூபர்’ போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

click me!