அமெரிக்காவில் பனிப்புயல் வீசிவருவதால், மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வீடுகளும் வாகனங்களும் பனியில் உறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மின்சார வசதி தடைபட்டு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. விமானம், ரயில் போன்ற போக்குவரத்து வசதிகளும் அதிக அளவில் துண்டிக்கப்பட்டுள்ளன.
பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 க்கு மேல் சென்றுவிட்டது. தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கியவர்களை மீட்பதும் தாமதமாகிறது.
இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்துபோன நிலையில் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் சில பகுதிளில்தான் பனிக்கட்டியின் நடுவே தண்ணீர் கொட்டுகிறது.
நயாகரா நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 3,160 டன் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இப்போது வினாடிக்கு 32 அடி அளவுக்குத்தான் தண்ணீர் கொட்டுவதாக நயாகரா நீரவீழ்ச்சி பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவிக்கிறது.