மத்திய புளோரிடாவில் வெப்பநிலை -27 டிகிரி வரை சரிந்துள்ளது. கார்கள், வீடுகள் அனைத்தும் பனியால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கின்றன. மருத்துவ உதவியைக் கூடப் பெற முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

1977ஆம் ஆண்டு பனிப்புயலில் நேர்ந்த உயிரிழப்புகளைவிட இந்த பாம் சூறாவளியால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. வடக்கு கலிபோர்னியாவில் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சியேரா நெவாடாவில் வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனி மூட்டத்தால் 90 சதவீதம் விமானங்கள் ரத்தாகும் நிலை உள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒருநாளில் 4 ஆயிரம் விமானங்கள் ரத்தாகியுள்ளன. வரும் சில நாட்களுக்கு வழக்கத்தைவிட மூன்றில் ஒரு விமானத்தையே இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பனியில் உறைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் மற்றும் மகள்களுடன் வெர்ஜின் தீவுக்கு சென்றிருக்கிறார்.