உலகில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ள நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கிறது. அந்நாட்டில் தொடர்ந்து பலமுறை நிலநடுக்கங்கள் நடந்துள்ளன. அவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி சிலவற்றை நினைவுகூரலாம்.
துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது. அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 170 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.
2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள்.
2020ஆம் ஆண்டில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் எல்சாயிக் நகரில் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 40 பேர் பலியானார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இன்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை 600 பேருக்கு மேல் உயிரிழந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் அபாயமும் உள்ளது.