விஜய் டிவியில், அன்புடன் குஷி சீரியலில் நடித்து பிரபலமான, மான்சி ஜோஷிக்கும், அவரின் காதலருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் சமீப காலமாக, இல்ல தரசிகளை கடந்து, இளம் ரசிகர்களையும் சீரியல்கள் வசீகரித்துள்ளன.
28
ஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஹிட் சீரியல்
இதன் காரணமாக, சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களும் அதிகம் கவனிக்கப்படும் நட்சத்திரங்களாக உள்ளனர். அந்த வகையில், விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான மான்சி ஜோஷி-க்கு தற்போது பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
38
அன்புடன் குஷி:
மான்சி, விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலமான ப்ரஜின் நடித்த, 'அன்புடன் குஷி' சீரியலில் ப்ரஜ்னக்கு ஜோடியாக ஆரம்பத்தில் நடித்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
48
மிஸ்டர் மனைவி:
2020-ஆம் ஆண்டு முதல் 2022-வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த சீரியலை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் மனைவி' சீரியலிலும் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
58
கன்னட சீரியல்களில் அதிக ஆர்வம்
தமிழை விட, கன்னட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த மான்சி ஜோஷி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக அறிவித்தார்.
68
ராகவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மான்சி
இதை தொடர்ந்து மான்சி ஜோஷிக்கும், அவரின் காதலர் ராகவ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிராமண முறைப்படி நடந்து முடிந்துள்ள இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
78
சீரியலில் ஆர்வம்:
மான்சி ஜோஷி கர்நாடகா மாநிலத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், தன்னுடைய பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு , கல்லூரி படிப்பை மங்களூரில் படித்தார். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, கல்லூரி படிப்பை முடித்தவுடன் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
88
மான்சி ஜோஷிக்கு குவியும் வாழ்த்து:
சீரியலில் மட்டும் இன்றி, மாடலிங், டிக் டாக் போன்ற செயலிகளிலும் ஆக்ட்டிவாக இருந்த மான்சி, தற்போது கன்னடம் மற்றும் தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது திருமண வாழக்கையில் இணைத்துள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.