Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் வீட்டை ஏலத்திற்கு விடும் வேலைகளில் இறங்கி உள்ளார் சிந்தாமணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் வீட்டை சிந்தாமணி ஜப்தி செய்து சீல் வைத்துள்ளதால், அவர் தன் குடும்பத்தினருடன் மீனாவின் அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். வீட்டை மீட்பதற்கான பொறுப்பை முத்து ஏற்றுள்ளதால், அவர் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார். மறுபுறம் சிந்தாமணி வீட்டை அபகரிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார். அதன்படி வீட்டை ஏலத்திற்கு விட உள்ளதாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் சிந்தாமணி. இதனால் அனைவருமே பதறிப்போய் உள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
முத்து கார் ஓட்டியே பணத்தை சம்பாதித்துவிடலாம் என்கிற கனவில் இருக்க, அவருடன் ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் வரும் நபர் ஒருவர், அவருக்கு புத்திமதி சொல்லி, நீ கார் ஓட்டினால் மட்டும் போதாது, நீ சம்பாதித்த பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நீ முன்னேற முடியும். நீ தூங்கும் நேரத்தில் கூட நீ சம்பாதித்த பணம் உனக்காக வருவாய் கொடுக்கணும். அதனால் நீ செய்யும் தொழிலேயே ஏதாவது முதலீடு செய்ய முடியுமா என யோசித்து முடிவெடு என அட்வைஸ் பண்ணுகிறார்.
35
பழைய ஓனரை சந்திக்கும் முத்து
இதையடுத்து தன்னுடைய நண்பர்களுடன் கலந்தாலோசிக்கும் முத்து, நம்முடைய பழைய முதலாளியிடம் உதவி கேட்கலாம் என முடிவெடுக்கிறார். இதையடுத்து அவரை அவரது வீட்டில் சென்று சந்திக்கும் முத்து, தனது நிலையை எடுத்து சொல்லி, உங்களிடம் இருக்கும் கார்களை என்னிடம் கொடுத்தால், அதன்மூலம் டிராவல்ஸ் நடத்தி நான் சம்பாதிப்பேன் என கூறுகிறார். அதற்கு அந்த முதலாளி, கார்கள் எல்லாம் 5 ஆண்டுகளாக எடுக்காமல் இருக்கிறது. அதை ரெடி பண்ண நிறைய செலவளிக்க வேண்டும் என கூற, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி சாவியை வாங்குகிறார் முத்து.
மறுபுறம் சிந்தாமணி, பைனான்சியரை சந்தித்து பேசுகிறார். அப்போது வீட்டை ஏலத்திற்கு விடுவது பற்றி ஆலோசிக்கிறார். வீட்டை ஏலத்திற்கு விடுவதில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என சிந்தாமணி சொல்ல, அதற்உ அந்த பைனான்சியர், அதெல்லாம் எதுவும் வராது, நம்ம அவங்களுக்கு கொடுத்த கெடு முடியப்போகுது. அவங்களால பணத்தை கட்ட முடியல, ஏலம் விடுவதற்கு நாம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியாச்சு. எல்லாமே பக்காவா பிளான் படி நல்லா போயிட்டு இருக்கு. கண்டிப்பா வீடு உங்க கைக்கு வந்துடும் என கூறுகிறார்.
55
வீட்டை ஏலத்திற்கு எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை
அப்படியெல்லாம், நாம் அஜாக்கரதையாக இருந்துவிட முடியாது என கூறும் சிந்தாமணி, அந்த முத்து 4 ஓட்ட கார்களை வாங்கி சரிபண்ணி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க போறானாம் என சொல்ல, அதெல்லாம் சான்ஸே இல்ல, அவன் கார் ஓட்டி சம்பாதிக்கணும்னா அந்த 38 லட்சத்தை திருப்பி கொடுக்க 30 வருஷம் ஆகும் என கூறுகிறார் பைனான்சியர். அதேபோல் ஏலம் எடுக்க வரும் ஆட்கள் எல்லாம் நம்ம ஆட்களாக இருக்க வேண்டும் எனகூறுகிறார் சிந்தாமணி, அதற்கு அந்த பைனான்சியர், அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், நான் செட் பண்ணிய ஆட்கள் தான் வருவாங்க என கூறுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.