Siragadikka Aasai Serial 15 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணிக்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை மீனா தன்னுடைய இங்கிலீஷ் திறமையால் தட்டி தூக்கி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணியைச் சந்திப்பதற்காக வித்யா அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு ரோகிணியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ரோகிணி துபாய்க்குச் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார். அப்போது அங்கு வரும் ரோகிணியிடம், "கிரிஷின் அம்மா துபாயில் இருக்கிறார் என்று இதுவரை பொய் சொல்லி சமாளித்தாய். ஆனால் இப்போது நிலைமையை பார்த்தியா நீ உண்மையிலேயே துபாய் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே?" என்று வித்யா கேட்கிறார்.
24
ரோகிணியின் துபாய் டிராமா
அதற்கு ரோகிணி, "துபாய் செல்ல தேவையான செலவுக்காக மனோஜிடம் ரூ.5 லட்சம் கேட்டிருக்கிறேன். அந்த பணம் கிடைத்தவுடன் உடனே கிளம்பிவிடுவேன்," என்று மனவேதனையுடன் கூறுகிறார். ரோகிணியின் இந்த மாற்றம் உண்மையானதா அல்லது வேறு ஏதாவது திட்டமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மறுபுறம், மீனா பெண்கள் சங்கக் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சந்தா வசூலித்து, அந்த நிதியை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தலாம் என்று திட்டமிடுகிறார். ஆனால் சிந்தாமணி மட்டும் சந்தா செலுத்த மறுத்து, அலட்சியமாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
34
பல்பு வாங்கிய சிந்தாமணி
அதே நேரத்தில், சிந்தாமணியின் உதவியாளர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆர்டரை கொண்டு வருகிறார். அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்க, சிந்தாமணிக்கு எதுவும் புரியாமல் "எஸ்... நோ..." என்று சமாளிக்கிறார். அவரது ஆங்கிலப் பேச்சை பார்த்த மேலாளர் வேறு ஒருவரை அணுக முடிவு செய்து கிளம்ப முயல்கிறார். அப்போது அங்கிருந்த மீனா, தனக்கு சரளமாக ஆங்கிலம் பேச முடியாவிட்டாலும், நீங்கள் கூறியதை முழுமையாகப் புரிந்துகொண்டதாக கூறி, ஆங்கிலத்திலேயே அந்த கார்பரேட் மேனேஜருக்கு விளக்கம் அளிக்கிறார்.
அவரது பேச்சால் மேலாளர் திருப்தியடைந்து, அந்த முக்கியமான கார்ப்பரேட் ஆர்டரை மீனாவுக்கே வழங்குகிறார். இதனால் சிந்தாமணிக்கு மீனா மீது கடும் பொறாமை உருவாகிறது. மீனாவின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் புதிய திட்டம் தீட்டத் தொடங்குகிறார். பெரிய ஆர்டரை வெற்றிகரமாக பெற்ற மகிழ்ச்சியில் மீனா, ஸ்வீட் பாக்ஸ் உடன் முத்துவைச் சந்தித்து, இந்த சந்தோஷமான தகவலை அவருடன் பகிர்ந்து கொள்கிறார். மீனாவின் சந்தோஷத்தை பார்த்து முத்துவும் மகிழ்ச்சியடைகிறார்.
ரோகிணியின் துபாய் பயணம் உண்மையிலேயே நடைபெறுமா? மீனாவுக்கு எதிராக சிந்தாமணி என்ன திட்டம் போடப் போகிறார்? இந்த திருப்பங்களுக்கு விடை அடுத்த எபிசோட்களில் தெரியவரும்.