Siragadikka Aasai : மனோஜை விடாமல் துரத்தும் கனகா... ரகசியமாக நடக்கும் பர்ஸ்ட் நைட் ஏற்பாடு; ரோகிணிக்கு வந்த டவுட்

Published : Jul 14, 2026, 10:02 AM IST

Siragadikka Aasai 14 July 2026 Today episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வந்தபோது கனகாவும் அங்கிருந்தார். இதனால் ரோகிணிக்கு மனோஜ் மீது சந்தேகம் எழுகிறது.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜின் கடைக்கு வந்த கனகா, மனோஜின் கையை பிடித்தபடி, "வாங்க... ஃபிரிட்ஜ் பார்க்கலாம் ஹஸ்பண்ட்!" என்று அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் மனோஜ் பதற்றத்துடன், "அங்கதான் ஃபிரிட்ஜ் இருக்கு, போய் பாருங்க" என்று சமாளித்து அனுப்பிவிடுகிறார். இதற்கிடையில், கனகாவை யார் அழைத்து வந்தார்கள் என்று டிரைவரிடம் கேட்டபோது, "மேடம் தான் அனுப்பி வைத்தாங்க" என்று கூறுகிறார்.

25
சந்தேகப்படும் ரோகிணி

அந்த நேரத்தில் ரோகிணியும் கடைக்கு வருகிறார். அவரை பார்த்த கனகா, முன்பு போலவே தனக்கு மேக்கப் செய்து தருமாறு கேட்கிறார். ஆனால் ரோகிணி அவரிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு கடைக்குள் செல்கிறார். பின்னர் மனோஜிடம் பேச ரோகிணி செல்லும் நேரத்தில், அங்கு வரும் கனகா, மனோஜின் கையைப் பிடித்து ஐஸ்கிரீம் சாப்பிட வருமாறு வற்புறுத்துகிறார். இதைப் பார்த்த ரோகிணிக்கு மனோஜ் மீது சிறிய சந்தேகம் உருவாகிறது. ஆனால் சந்தோஷ், கனகாவை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

35
தப்பித்த மனோஜ்

அதன் பிறகும் ரோகிணி, "அவள் ஏன் உன் கையை பிடித்து இழுக்கிறாள்?" என்று கேட்க, மனோஜ், "நான் இந்தக் கடையின் உரிமையாளர் என்பதால் அப்படிச் செய்திருப்பாள்" என்று சமாளிக்கிறார். அதற்கும் ரோகிணி திருப்தியடையாமல், "கனகா பொருள் வாங்க வருபவள் மாதிரி தெரியலையே?" என்று கேட்க, மனோஜ் அவளுடன் அவளது கணவரும் வந்திருக்கிறார் என்று கூறுகிறார். அதே சமயம் ஜோதிடரும் அங்கு இருப்பதால், அவரையே கனகாவின் கணவர் என்று ரோகிணியிடம் அறிமுகப்படுத்தி மனோஜ் எஸ்கேப் ஆகிறார்.

45
பணம் கேட்ட ரோகிணி

பின்னர் ரோகிணி, மனோஜிடம் பணம் எப்போது தரப் போகிறீர்கள் என்று கேட்டு, தான் விரைவில் வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும் கூறுகிறார். மற்றொரு பக்கம், முத்துவும் மீனாவும் டியூஷன் சென்று ஸ்வேதாவிடம் மிஸ்ரா சார் குறித்து விசாரிக்கின்றனர். ஆனால் ஸ்வேதா, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கூறுகிறார். அதன்பிறகு முத்துவும் மீனாவும் மிஸ்ரா சாரிடமும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து பேசுகின்றனர்.

55
பர்ஸ்ட் நைட் ஏற்பாடு

இதற்கிடையில், கனகாவின் வீட்டில் வேறு பரபரப்பு நடக்கிறது. கனகாவுக்கும் மனோஜுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்ய கனகாவின் அம்மா தீவிரமாக தயாராகிறார். அந்த இடத்திற்கு மனோஜுடன் ஜோதிடரும் சந்தோஷும் வருகிறார்கள். இந்த ஏற்பாட்டைப் பார்த்த மனோஜ் அதிர்ச்சியடைந்து, "எனக்கு இன்னும் விவாகரத்து கூட ஆகவில்லை. இப்போது இப்படியெல்லாம் நடந்தால் நான் நேராக ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்" என்று கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார். மனோஜின் ரகசியம் இன்னும் எவ்வளவு நாள் மறைந்திருக்கும்? ரோகிணி உண்மையை கண்டுபிடிப்பாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதில் அடுத்த எபிசோடில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories