சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் நாயகனாக நடித்து வரும் அமல்ஜித், விரைவில் விஜய் டிவி சீரியல் நடிகையை திருமணம் செய்துகொள்ள உள்ளாராம்.
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிங்கப்பெண்ணே. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நாயகனாக அமல்ஜித் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மனிஷா மகேஷ் நடிக்கிறார். இதில் அன்பு கதாபாத்திரத்தில் அமல்ஜித்தும், ஆனந்தியாக மனிஷாவும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேற வெலவில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அவர்கள் இருவரும் சீரியலில் அண்மையில் தான் திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது ஹனிமூன் கொண்டாட கொடைக்கானல் சென்றிருக்கிறார்கள்.
24
அமல்ஜித்தின் காதலி யார்?
சீரியலில் அமல்ஜித்துக்கு கல்யாணம் ஆனது போல் விரைவில் நிஜத்திலும் கல்யாணம் நடைபெற இருக்கிறதாம். அமல்ஜித் கேரளாவை சேர்ந்தவர். இவர் சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். சிங்கப்பெண்ணே சீரியலில் நடிக்கும் முன்னரே அம்மன் என்கிற தொடரில் நாயகனாக நடித்திருந்தார் அமல்ஜித். அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த பவித்ரா என்பவரை தான் தற்போது உருகி உருகி காதலித்து வருகிறார் அமல்ஜித், இவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாம்.
34
அமல்ஜித் கல்யாணம் எப்போது?
பவித்ரா அம்மன் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே என்கிற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து வந்த அமல்ஜித் - பவித்ரா விரைவில் ரியல் ஜோடியாக மாற இருப்பதால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
சின்னத்திரையில் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியான சம்பவம் இதற்கு முன்னர் ஏராளமான நடந்திருக்கின்றன. குறிப்பாக மெட்டி ஒலியில் நடித்த சேத்தன், பிரியதர்ஷினி, ராஜா ராணி சீரியல் மூலம் காதலித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரியல் ஜோடியான செந்தில் - ஸ்ரீஜா, திருமணம் சீரியல் மூலம் காதலித்து கரம்பிடித்த சித்து - ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், விரைவில் அமல்ஜித் - பவித்ரா ஜோடியும் அந்த பட்டியலில் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.