Singapenne serial today episode Anandhi identifies the Black Sheep: சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. துரோகம் செய்தது யார் என்பதை ஆனந்தி ரகசியமாக கண்டுபிடித்துள்ளார்.
சன் டிவியின் முன்னணித் தொடரான 'சிங்கப்பெண்ணே' தற்பொழுது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அதிரடியான திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய நாளுக்கான ப்ரோமோவின் தொடக்கத்தில், சௌந்தர்யாவை அழைத்து ஆனந்திஏற்கனவே சந்தேகம் இருக்கும் சேதுவிடம் பணம் இருக்கிறதாக என கேட்க சொல்கிறார்.
25
சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அதற்கு அவன், "என்னிடம் பஸுக்கு கூட பணம் இல்லை? என்கிட்ட வந்து 2000 ரூபாய் கேட்கச் சொல்ற? என சொல்கிறார். இதை கேட்டதும் ஆனந்தி, "சந்தேகமே இல்லை, அந்த சேது தான் கருப்பாடு!" என்று ஆவேசமாக கூறுகிறார். இதன் மூலம், அலுவலகத்தில் நடக்கும் குழப்பத்திற்கு அனைத்துக்கும் மறைமுகமாக இருந்து கொண்டு துரோகம் செய்யும் 'கருப்பாடு' யார் என்ற மர்மம் தற்போது உடையத் தொடங்கியுள்ளது. சேதுவின் மீது விழுந்துள்ள இந்த வலுவான சந்தேகம், வரும் எபிசோட்களில் மிகப்பெரிய மோதல்களுக்கும் உண்மைகளை வெளிக்கொணரவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
35
Singappenne serial latest shooting spot video
தொடர்ந்து யாழினி காதலிக்கும் விஷயம் ஆனந்திக்கு தெரியவருகிறது. "இரண்டு குடும்பத்தோட மரியாதையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு உங்க ரெண்டு பேருக்குமே இருக்கு. " என்று அவர் கூறுவது, கதையில் இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் கௌரவப் பிரச்னையையும், அதைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நாயகனும் நாயகியும் இருப்பதை உணர்த்துகிறது. இதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் சற்று நெகிழ்ச்சியாகவும், அழகான குடும்ப உறவைச் சித்தரிப்பதாகவும் அமைகிறது.
45
Sun TV Singappenne serial update
மறுபக்கம் அன்பு தான் வாங்கிய சம்பளத்தை ஆனந்தியிடம் கொடுக்க முன்வருகிறார், "சம்பளத்தை வாங்குனா பொண்டாட்டி கிட்ட கொடுக்கறதுதான முறை?" என்று உரிமையோடு கேட்கிறான். ஆனால் ஆனந்தி, "இல்லைங்க, வீட்டுக்கு பெரியவங்க அத்தை இருக்காங்க, அவங்க கிட்டயே கொடுங்க" என்று கூறி, பெரியவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை அழகாகப் பதிவு செய்கிறாள்.
55
Singappenne serial latest promo
சதித் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், குடும்ப உறவுகளின் மேன்மை மாறாமல் இருப்பதை இந்த ப்ரோமோ காட்டுகிறது. சேதுவின் சதி அம்பலமாகுமா? குடும்ப மரியாதையை யாழினி எப்படிக் காப்பாற்றப் போகிறாள்? என்பது போன்ற கேள்விகளுடன் இரவு 9:30 மணிக்கு இந்த எபிசோட் விறுவிறுப்பாக அமையவுள்ளது.