இனிமே தான் ஆட்டம் சூடுபிடிக்கும்! குக் வித் கோமாளி 7-ல் ரோஜா என்ட்ரி.. 100% எண்டர்டெய்ன்மெண்ட் உறுதி!

Published : Mar 24, 2026, 04:06 PM ISTUpdated : Mar 24, 2026, 07:19 PM IST

CWC 7 Promo Roja as New Judge : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 7-ல் நடிகை ரோஜா புதிய நடுவராக இணைந்துள்ளார். ரக்ஷனுடன் ஷாலின் ஜோயா தொகுத்து வழங்க, ரியல் ஜோடிகள் குக்குகளாகக் களம் இறங்கும் இந்த சீசனின் அதிரடி மாற்றங்கள் குறித்த முழு விவரம்.

PREV
14
Cooku With Comali Season 7 latest updates 2026

தமிழ் தொலைக்காட்சி உலகில் ரசிகர்களை சிரிப்பிலும், சுவையிலும் மகிழ்வித்து வரும் பிரபல ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது தனது 7வது சீசனுடன் மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுமையான கான்செப்ட், வேடிக்கையான போட்டியாளர்கள் மற்றும் காமெடி கலந்த சமையல் சவால்களால் ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி, இம்முறை ஒரு புதிய மாற்றத்துடன் வருகிறது.

24
Vijay TV CWC 7 promo and launch date March 2026

அதாவது, இந்த சீசனில் புதிய நடுவராக நடிகை ரோஜா இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கௌஷிக் ஆகியோர் நடுவராக இருந்து வந்த நிலையில், தற்போது ரோஜா 4 ஆவது நடுவராக இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தமில்லாமல் நடந்த பாடல் திருட்டு? யூத் படத்தில் 12 ஆண்டு கால உழைப்புக்குச் சன்மானம் மறுக்கப்பட்தா?

34
Cooku With Comali Season 7 contestants and comalis list

சமீபத்தில் வெளியான புதிய ப்ரோமோவில் ரோஜாவின் வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த ப்ரோமோவில் அவர் தனது தனித்துவமான ஸ்டைலிலும், உற்சாகமான பேச்சிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனால், இந்த சீசன் மேலும் கலகலப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

44
Roja as new judge in CWC 7

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதன் சிரிப்பூட்டும் தருணங்கள், போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளின் கலாட்டாவால் குடும்பங்களின் மனதை வென்றுள்ளது. இந்நிலையில், ரோஜாவின் இணைப்பு இந்த சீசனை இன்னும் வெற்றிகரமாக மாற்றுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாத அந்த ஒரு மேஜிக்; எத்தனை மேடை ஏறினாலும் அதே பாட்டு; ஏ.ஆர். ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories