Lakshmi Priya in BB house: ‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில் - லட்சுமி பிரியாவின் புதிய பயணம் ஆரம்பம்!

Published : Sep 06, 2026, 02:00 PM IST

Lakshmi Priya in BB house: மகாநடி சீரியலில் காவேரியாக மனதில் இடம்பிடித்த லட்சுமி பிரியா, தற்போது பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனில் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

PREV
16
‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசனில் தொலைக்காட்சி, சினிமா பிரபலங்கள், மாடல்கள், யூடியூபர்கள் உள்ளிட்ட Celebrity போட்டியாளர்களுடன் சேர்ந்து Common Man-களுக்கும் பங்கேற்கின்றனர். அந்த பட்டியலில், ரசிகர்களிடம் ‘காவேரி’யாக மனதில் இடம்பிடித்த லட்சுமி பிரியா, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

26
யார் இந்த லட்சுமி பிரியா?

நடிகை லட்சுமி பிரியா, 1993-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறந்தவர். பிரபலமான SRM கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த இவர், கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த பிறகு மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளார்.

மாடலிங் துறையில் தனது திறமையை வெளிப்படுத்திய லட்சுமி பிரியா, தொடர்ந்து பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, 2018-ம் ஆண்டு நடைபெற்ற ‘Miss Miraki’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றது, அவரது மாடலிங் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்த வெற்றிக்குப் பிறகே சின்னத்திரை மற்றும் நடிப்பு துறையில் அவருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

36
‘மகாநதி’யில் காவேரி!

லட்சுமி பிரியாவை ரசிகர்கள் அதிகம் அறிந்துகொண்டது 2023-ல் விஜய் டிவியில் தொடங்கிய ‘மகாநதி’ சீரியல் மூலமாகத்தான். இதில், காவேரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

குடும்ப உறவுகள், காதல், பிரிவு, உணர்ச்சிப் போராட்டங்கள் என பல்வேறு சூழல்களில் காவேரி கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்திய விதம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

46
சீரியல் மட்டுமல்ல..சினிமாவிலும் என்ட்ரி!

லட்சுமி பிரியாவின் பயணம் சின்னத்திரையுடன் நின்றுவிடாமல், தமிழ் சினிமாவிலும் பன்னிக்குட்டி (Pannikutty), பத்து தல (Pathu Thala), ‘The Road' (2023), ‘Trip’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய் டிவியின் ‘Super Singer’ நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக தோன்றியுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டே இல்லாத ஒரு எபிசோடில் அவருக்குப் பதிலாக லட்சுமி பிரியா தொகுத்து வழங்கியது ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

56
இப்போது பிக்பாஸ் வீடு.. என்ன நடக்கப்போகிறது?

இதுதான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இதுவரை சீரியல் ரசிகர்களிடம் ‘காவேரி’யாக மனதில் இடம்பிடித்த லட்சுமி பிரியா, தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டுக்குள் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் தினசரி டாஸ்க்குகள், கருத்து வேறுபாடுகள், நட்பு, நாமினேஷன் என பல்வேறு சூழல்கள் உருவாகும். சீரியலில் நடித்த அனுபவம் கொண்ட லட்சுமி பிரியா, அந்த அனுபவத்தை ரியாலிட்டி ஷோவில் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் ரசிகர்கள் கவனிக்க உள்ளனர்.

66
‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில்

மேலும், கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்திருந்த நிலையில், இந்த ஆண்டு அதே நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக அவர் நுழைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில். திரையில் பார்த்த அந்த அமைதியான முகத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான லட்சுமி பிரியா எப்படி இருப்பார்? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த சீசனில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவரக்கூடிய போட்டியாளர்களில் லட்சுமி பிரியாவும் ஒருவராக மாற வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories