Bigg Boss season 10: இன்று தான் அந்த நாள்! பிக்பாஸ் வீட்டுக்குள் யார் யார் செல்கிறார்கள்? வைரலாகும் லிஸ்ட்!

Published : Sep 06, 2026, 11:31 AM IST

Bigg Boss season 10: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனில் பிரபலங்களுடன், Bigg Boss: The Common Man நிகழ்ச்சி மூலம் தேர்வு செய்யப்படும் காமன் மேன் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளனர்.

PREV
16
பிக்பாஸ் சீசன் 10

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, 10-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதனால் வழக்கமான பிக்பாஸ் சீசன்களை விட இந்த சீசன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

26
இன்று மாலை 6 மணிக்கு கிராண்ட் லாஞ்ச்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் கிராண்ட் பிரீமியர் இன்று செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சியில் Star Vijay-லும், OTT தளத்தில் JioHotstar-லும் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கலாம். இதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது போட்டியாளர்கள்தான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இதுவரை பெரும்பாலும் நடிகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள், யூடியூபர்கள் உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை Celebrity போட்டியாளர்களுடன் சேர்ந்து Common Man-களுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

36
பிக்பாஸ்- காமன் மேன்

Bigg Boss – The Common Man என்ற தனி நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, சினிமா, சீரியல் அல்லது சமூக வலைதளங்களில் ஏற்கனவே பிரபலமாக இல்லாத சாதாரண நபர்கள் போட்டியிட்டனர். இதில், தேர்வு செய்யப்படும் காமன் மேன் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று நுழைய உள்ளனர்.

இதனால், Celebrity-களுக்கும் Common Man-களுக்கும் இடையிலான போட்டி எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதான் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. பிரபலங்களை விட இந்த காமன் மேன் தான் இந்த சீசனின் Game Changer ஆகப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

46
வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்!

கடந்த சில நாட்களாகவே பல பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், அவற்றில் பல பெயர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தகவல்களின்படி, நவீன் குமார், ஆர்யன், பூவி அரசன், வினோத்பாபு, நடன இயக்குநர் ஸ்ரீதர், பர்கவ் ராம், திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, Lungiboys குழுவைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட பலரது பெயர்கள் போட்டியாளர் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் நடிகை சதிகா, குமரன் தங்கராஜன், லட்சுமி பிரியா, தன்யா பல்லத், பிளாக் பாண்டி உள்ளிட்ட பெயர்களும் உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

56
இந்த சீசனில் இன்னும் என்ன ஸ்பெஷல்?

தமிழ் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நாளில் தொடங்குகின்றன. இதற்கான சிறப்பு புரோமோவில் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன்லால் ஆகிய தென்னிந்திய சினிமாவின் நான்கு மாஸ் சூப்பர் ஸ்டார்களும் ஒன்றாகத் தோன்றுவது சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

66
பிக் பாஸ் கிராண்ட் லாஞ்

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் கிராண்ட் லாஞ்சில் விஜய் சேதுபதி முன்னிலையில் போட்டியாளர்கள் அறிமுகமாக உள்ளனர். Celebrity போட்டியாளர்களுக்கு நடுவே ஒரு சாதாரண மனிதர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தருகிறார். அதனால், இந்த சீசனின் முதல் நாளிலேயே எதிர்பாராத சர்ப்ரைஸ் இருக்குமா? என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories