Senthil Have Lot of Money and Orderd Furnitures to Home : செந்திலிடம் கட்டுக் கட்டாக பணம் இருக்கும் நிலையில் தலைகாலு புரியாம இப்போது ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால், மீனா தான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் தனிக்குடித்தனம் சென்ற செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வாரம் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஆம், காந்திமதி தனது பிறந்தநாளை எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட சக்திவேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
25
காந்திமதி பாட்டியின் 75ஆவது பிறந்தநாள்
இதில் ராஜீ தனக்கு தானே புலம்பிக் கொண்டிருக்க கதிர் வேடிக்கை பார்த்து அதன் பிறகு காந்திமதி பாட்டியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி பேசினார். கதிருக்கும் பிறநதநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் நிலையில், குடும்பத்தோடு கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதைத் தொடர்ந்து தனிக்குடித்தனம் சென்ற செந்தில் வீட்டு பால் காய்ச்சி முடித்த கையோடு செந்தில் வேலைக்கு செல்கிறேன் என்று புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
பால் காய்ச்சிற்கு வந்த அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மீனா மட்டும் ஆபிஸிற்கு செல்லாமல் தனியாகவே இருந்தார். நேரம் ஆக ஆக அவருக்கு பசியும் எடுக்க ஆரம்பித்தது. இதை தொடர்ந்து மளிகை பொருட்களில் வந்த பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டார். பின்னர் அலசி காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து மடித்தார். இரவு 10 மணிக்கு மேல் ஆக தூக்கவும் வந்தது.
45
இரவு 12 மணிக்கு வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம்
வேலைக்கு சென்ற செந்திலுக்கு 10 முறைக்கு மேல் போன் செய்துள்ளார். ஆனால், அவர் வந்த மாதிரி தெரியவில்லை. இரவு 12 மணிக்கு வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. மீனா சென்று பார்த்த போது செந்தில் முழு போதையில் வந்திருந்தார். அப்போது மீனாவிற்கு தெரியவில்லை. பின்னர் வீட்டிற்குள் வந்து செந்தில் பேசிய போது மீனாவிற்கு வாடை வந்து கண்டுபிடித்துள்ளார். அதைப் பற்றி கேட்ட போது ஆம், லைட்டா குடித்திருக்கிறேன். அதற்கு காரணம் இத்தனை வருட ஜெயில் வாழ்க்கையிலிருந்து இப்போதுதான் எனக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
அதை கொண்டாட நண்பர்கள் எனக்கு டிரீட் வைத்தார்கள் என்றார். மேலும், வேலைக்கு சென்றுவிட்டு அப்படியே வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர் ஆர்டர் செய்திருக்கிறேன். அதான் லேட்டா ஆயிடுச்சு. நாளைக்கு டெலிவரி பண்ணிடுவாங்க என்றார். மீனாவும் காசு ஏது, உங்களுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என்று துருவி துருவி கேட்க, அதற்கு எல்லாம் காலையில் பதில் சொல்வதாகவும்,, தனக்கு தூக்கம் வருவதாகவும் கூறிவிட்டு செந்தில் தூங்க சென்றார். இனி ஒவ்வொரு நாளும் மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.