பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் லஞ்ச பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்த செந்தில், அதை பீரோவில் வைக்கும்போது மீனா பார்த்துவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியனும், சரவணனும் கடையை அடைத்துவிட்டு, இரவில் பேசிக்கொண்டே வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன் சரவணனிடம் இன்னைக்கு நீ கோவிலுக்கு போய் ஒரு பொண்ணுகூட பேசிக்கிட்டிருந்ததை நானும் பார்த்தேன் என சொல்கிறார். அந்த பொண்ணு யாரு? வீட்டுல வந்து சம்மந்தி சண்டைபோட்டுச்சுல அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா? இப்போ தான் ஒரு பொண்ணோட உனக்கு டைவர்ஸ் ஆகப்போகுது. அதுக்குள்ள இன்னொரு பொண்ணுகிட்ட பேசுறதெல்லாம் சரியில்லை என பாண்டியன் அட்வைஸ் பண்ணுகிறார்.
25
சரவணனுக்கு அட்வைஸ் பண்ணும் பாண்டியன்
உடனே சரவணன், நாங்க வந்து தப்பா எதுவும் பேசல, அந்தப் பொண்ணும் என்னைய மாதிரியே, டைவர்ஸ் ஆகி அவங்க அப்பா, அம்மா வீட்டுல தான் இருக்கு. அதனால ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா பேசிக்கிறோம் அவ்வளவுதான், மத்தபடி எங்களுக்குள்ள எந்த தப்பான எண்ணமும் இல்லை என சொல்லிவிடுகிறார். இதையடுத்து செந்திலை காட்டுகிறார்கள். அவர் தற்போது மாமனார் பேச்சைக் கேட்டு நிறைய லஞ்சம் வாங்க தொடங்கி இருக்கிறார். அப்படி தான் வாங்கிய லஞ்ச பணத்தை எடுத்து வந்து வீட்டுக்குள் வைக்க வருகிறார். கை நிறைய பணத்தோடு பீரோவை திறக்கிறார் செந்தில்.
35
லஞ்ச பணத்துடன் சிக்கும் செந்தில்
அந்த லஞ்ச பணத்தை செந்தில் பீரோவில் வைக்கையில் அங்கு மீனா வருகிறார். அவரைப் பார்த்த பதற்றத்தில் லஞ்ச பணத்தை எல்லாம் கீழே தவறவிடுகிறார் செந்தில். கட்டுக்கட்டாக பணம் கீழே விழுந்ததை பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என மீனா கேட்க, செந்தில் பதற்றத்தோடே நின்றுகொண்டிருக்கிறார். இது அப்பாவுக்கு கொடுப்பதற்காக நான் சேர்த்து வச்சிருந்த பணம் என சொல்லி மழுப்பிகிறார் செந்தில். அவரிடம் கொடுப்பதற்காக பேங்கில் இருந்து எடுத்து வந்தேன் என பொய்யை சொல்கிறார். இருந்தாலும் மீனாவுக்கு சந்தேகம் குறையவில்லை.
மறுபுறம் கோமதி வீட்டில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது ராஜி மட்டும் டயட்டில் இருப்பதால், அவர் சாப்பாடு சாப்பிடாமல், வெள்ளரிக்காய், அவிச்ச முட்டை போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த காந்திமதி, என்னடி இப்படி சாப்பிட்டுக்கிட்டு இருக்க, இதெல்லாம் என்ன சாப்பாடு என திட்டுகிறார். அதற்கு ராஜி, நான் குண்டாக இருக்கிறேன்னு ஒருத்தன் சொல்லிட்டான். அதனால் தான் உடம்பை குறைப்பதற்காக டயட் உணவுகளை எடுத்துக் கொள்கிறேன் என சொல்கிறார். உடனே எவன் உன்னையை அப்படி சொன்னான் என காந்திமதி கேட்கிறார்.
55
மிரட்டும் காந்திமதி
ஒருவேளை காலேஜில் யாராவது சொல்லியிருப்பாங்க என அரசி சொல்ல, அவன் யாருன்னு மட்டும் என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன் என அப்பத்தா மிரட்டுகிறார். அந்த ஆள் கதிர் தான் என்கிற உண்மையை சொல்லாமல் மறைக்கிறார் ராஜி. அப்போது அருகில் இருந்த கதிர், ஒருவேளை இவ குண்டாக இருப்பதால், ஸ்லிம் ஆகுறதுக்கு டிப்ஸ் சொல்லிருப்பான் என கூறுகிறார். இறுதியாக பாண்டியன் தன்னுடைய துணிகளை எல்லாம் தன் கையால் துவைக்கிறார். எந்த துணியிலுமே அழுக்கு போகவே இல்லை. பின்னர் அங்கு வரும் கோமதி, அதை வாங்கி துவைத்து காயப்போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.