காந்திமதி ஸ்டோர்ஸ் கடை ஆரம்பித்து சண்டையெல்லாம் நடந்த பிறகு அதைப் பற்றிய பேச்சு இல்லாமல் இருந்தது. மேலும், பழனிவேல் தொடர்பான காட்சிகளும் ஒளிபரப்பாகவில்லை. இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 651ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
23
காந்திமதி ஸ்டோர்ஸ் வியாபாரம்
பழனிவேல் தனியாக கடை ஆரம்பித்த பிறகு கடையில் வியாபாரம் எப்படி நடந்தது? லாபம் வந்ததா இல்லையா என்பது பற்றி எந்த காட்சிகளும் ஒளிபரப்பாகவில்லை. இந்த சூழலில் தான் கிட்டத்த ஒரு வாரங்களுக்கு பிறகு இப்போதுதான் காந்திமதி ஸ்டோர்ஸ் கடையில் வியாபாரம் நடந்தது தொடர்பாக சுகன்யா வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் நாளுக்கு நாள் வியாபாரம் நன்றாக நடக்கிறது என்றும், லாபம் அதிகமாக வருகிறது என்றும் கூறி சுகன்யா சந்தோஷப்பட்டுள்ளார்.
33
சுகன்யாவின் புது டெக்னிக்
அதோடு, சக்திவேலுவிடமும் கூறினார். மேலும், கடையின் வியாபாரத்திற்கு புதிய டெக்னிக்கை பாலோ பண்ணுவதாகவும் கூறினார். அது வேறொன்றுமில்லை, இதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைதான். அதனுடைய பிராஞ்ச் என்று கூறினார். மேலும் அவருடைய முகத்திற்காக கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகிறார்கள் என்று பேசினார். இனி வரும் நாட்களில் எப்படி வியாபாரம் நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.