சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோகிணியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையின் போது செம சம்பவம் காத்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தனக்கு கல்யாணம் ஆனதை மறைத்து மனோஜை திருமணம் செய்திருக்கிறார் என்பதை முத்து கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் சொல்ல, ஆத்திரம் அடைந்த விஜயா, ரோகிணியை வீட்டை விட்டே துரத்தி இருக்கிறார். தன் மகனுக்கு துரோகம் செய்த ரோகிணி இனி வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்துள்ள விஜயா, இருவருக்கும் டைவர்ஸ் செய்து வைக்க முடிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. முதல் கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையும் தற்போது நடந்திருக்கிறது.
25
சாட்சி சொல்ல தயாராகும் வித்யா
ரோகிணி செய்த ஃபிராடு வேலைகளை எல்லாம் நன்கு அறிந்தவர் வித்யா, அவர் தற்போது முத்து - மீனாவுடன் நெருக்கமாக இருக்கிறார். ஏனெனில் வித்யாவின் காதல் திருமணத்தை பல பிரச்சனைகளை கடந்து நடத்தி வைத்தது முத்து தான். அதனால் அவர்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார் வித்யா, அவரை சந்தித்து பேசி உள்ள முத்து மற்றும் மீனா, நீங்கள் ரோகிணிக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டும் என கேட்க, அதற்கு வித்யாவும் சம்மதித்துவிடுகிறார். ஏனெனில் ரோகிணி பணம் திருடியது முதல் முத்துவின் கார் பிரேக் வயரை அறுத்துவிட்டது வரை எல்லா மேட்டரும் வித்யாவுக்கு தெரியும்.
35
ரோகிணியின் சூப்பர் ஐடியா
முத்து - மீனாவே இப்படி பிளான் போட்டால் ரோகிணி சும்மாவா இருப்பார். அவர் ஒன்றை அடைய விரும்பினால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருடைய ஒரே நோக்கம் மனோஜ் மீண்டும் இணைவது. அதற்கான வேலைகளை சைலண்டாக செய்து வருகிறார். முதலில் என் மூஞ்சிலேயே முழிக்காத என சொன்ன மனோஜையே தன்னுடைய பிசினஸ் பார்ட்னராக ரோகிணி இருக்கட்டும் என சொல்ல வைத்திருக்கிறார் ரோகிணி. அதுமட்டுமின்றி தன்னை இன்னொருவர் பாலோ பண்ணுவதாக ஒரு ஆள் மூலம் கூறி மனோஜை பார்க்கிற்கு வர வைத்து, அங்கு அவர் வாயாலயே தன்னை பொண்டாட்டி என சொல்ல வைத்திருக்கிறார்.
இதுபோதாதென்று ரோகிணிக்கு சப்போர்டாக சிந்தாமணியும் இருக்கிறார். ஏற்கனவே ரோகிணிக்கு ஒரு வீடு பிடித்துக் கொடுத்து வைத்துள்ள சிந்தாமணி, அவரை விஜயா வீட்டிற்கு டிரெஸ் எடுக்க செல்வதுபோல் செல், நான் அங்கிருந்து அவர்கள் உன்னை வெளியே துரத்தி விடுவதை வீடியோ எடுத்து விடுகிறேன் என சொல்லி, சொன்னதைப் போல் ஒரு வீடியோவையும் எடுத்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி விஜயா, பார்வதியிடம் சென்று ரோகிணிக்கு எதிராக நீ கோர்ட்டில் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று சொன்னதை, அங்கிருந்த சிந்தாமணி போன் போட்டு ரோகிணிக்கே அம்பலப்படுத்திவிட்டார்.
55
ரோகிணி பக்கம் சாயும் மனோஜ்
கோர்ட்டில் மனோஜே ரோகிணி பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், ரோகிணி தான் மனோஜுக்கு ஒரு பெரிய ஆர்டரை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த ஆர்டர் இல்லாவிட்டால் மனோஜ் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார். அவருடைய சொத்துக்களும் பறிபோய்விடும். அதனால் அந்த ஆர்டரை வைத்தே ரோகிணி மனோஜை பிளாக்மெயில் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி மனோஜ் டைவர்ஸ் வேண்டும் என்று அடம்பிடித்தால், தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை கொடுத்து முத்து, விஜயா ஆகியோரை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் பட்டாசாய் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.