சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்காக மிகப்பெரிய ஆர்டரை வாங்கிக் கொடுத்துள்ள ரோகிணி அவருடன் புது டீலிங் ஒன்றையும் போட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா புதிதாக பூக்கடை ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழாவில் குடும்பத்தார் கலந்துகொண்ட நிலையில், ரோகிணி அழையா விருந்தாளியாக கலந்துகொண்டிருக்கிறார். அவரை பார்த்ததும் விஜயா கடுப்பாக, தான் இந்த ஆர்டர் கொடுத்த மேனேஜர் அழைப்பை ஏற்று வந்திருப்பதாக சொல்லி இருந்தார். இதனால் சண்டைபோடாமல் கம்முனு இருக்கிறார் விஜயா. இந்த திறப்பு விழாவில் பார்வதி, ரோகிணியின் தோழி வித்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்திருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
24
பூக்கடை திறந்த மீனா
மீனாவின் பூக்கடையை அண்ணாமலையும், விஜயாவும் சேர்ந்து திறந்து வைக்கிறார்கள். அதன்பின்னர் முதல் போனியே அண்ணாமலை தான். அவரை பூ வாங்க சொல்லி அதை விஜயாவுக்கு வைத்துவிட சொல்கிறார் முத்து. இதையடுத்து ரோகிணி மேனேஜரை அழைத்து ஆர்டர் விஷயமாக பேசுகிறார். அப்போது அந்த மேனேஜர் மனோஜை அழைத்து, இந்த அபார்ட்மெண்டுக்கான ஹோம் அப்ளையன்ஸுகளை வழங்கும் ஆர்டரை உங்களுக்கே தர இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு மனோஜ் சந்தோஷப்படுகிறார். தனக்கு இந்த புராஜெக்டை கொடுத்த மேனேஜருக்கு நன்றி சொல்கிறார்.
34
ரோகிணி போட்ட டீலிங்
அதற்கு அந்த மேனேஜர் உங்க நன்றியை ரோகிணிக்கு சொல்லுங்க. அவங்களுக்காக தான் இந்த ஆர்டரை நான் உங்களுக்கு கொடுக்க சம்மதித்தேன். ரோகிணி உங்க வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி சொன்னார். அவங்களை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என அந்த மேனேஜர் சொல்ல, அப்போது குறுக்கிடும் விஜயா, டேய் மனோஜ் நீ ஏண்டா இந்த ஆர்டரை ஏத்துக்கணும் என கேட்க, அதற்கு அவர் எனக்கு இருக்கும் கடனை அடைக்க இந்த ஆர்டர் உதவியா இருக்கும்மா அதனால இந்த ஆர்டரை நான் ரோகிணியோடு சேர்ந்து டெலிவரி செய்வேன் என ஒப்புக்கொள்கிறார். அதுமட்டுமின்றி இந்த விஷயத்துக்காக நான் அவள் செய்த துரோகத்தை மறக்க மாட்டேன் என்றும் கூறுகிறார் மனோஜ்.
மறுபுறம் நீத்துவின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் முத்து, அங்கு வேலை பார்க்கும் ஊழியரிடம் உங்களுக்கு இங்க நீத்து கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் தருகிறோம் என டீல் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே வரும் நீத்து, முத்துவை அழைத்து பேசுகிறார். அப்போது அவரிடம் நீ ஸ்ருதி கிட்ட மன்னிப்பு கேளு என சொல்ல, அதெல்லாம் முடியாது என சொல்லும் நீத்து, நான் ரவியை லவ் பண்ணுகிறேன் என்று சொல்லி கடுப்பேற்றுகிறார். மண்டைக்கனத்தோடு பேசும் நீத்துவிடம் வார்னிங் கொடுக்கும் முத்து, ஒழுங்கு மரியாதையா நீ மன்னிப்பு கேட்குற இல்லேனா ஓட்டலை அடிச்சு ஒடச்சிருவேன் என மிரட்டிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்ப்போம்.