ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!

Published : Feb 27, 2026, 05:00 PM IST

Revathi Dream about Husband Karthik Life Danger : கார்த்திகை தீபம் சீரியலில் எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக்கை சுட்டுக் கொள்வது போன்று ரேவதி கனவு கண்டுள்ளார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Revathi Dream about Husband in Karthigai Deepam

ஜீ தமிழ் சீரியலில் சுவாரஸ்யமாகவும், காதல் காட்சிகளுடனும் ஒளிபரப்பாகி வரும் சிரீயல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் ஆரம்பத்தில் காலத்தின் கட்டாயம், பாட்டி, மாமா, அத்தையின் கட்டாயத்திற்காக கார்த்திக் ரேவதியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ரேவதிக்கு துளி கூட விருப்பம் இல்லாத நிலையில் திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கை அவமானப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும், வெளிநாட்டிற்கு புறப்பட்டு செல்லும் தயாராக இருந்தார். விமான நிலையம் வரை சென்று பின்னர் காயத்துடன் திரும்ப வந்தார்.

26
Revathi Husband Life at Risk News

ஒரு கட்டத்தில் கார்த்திக் யார் என்ற உண்மையை தெரிந்த பிறகு அவரை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தெரிந்து ரொம்பவே வருத்தப்பட்டார். கண்ணீர்விட்டு கதறி அழுதார். ஆனால், இப்போது கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருத்தர் மீது ஒருத்தர் எல்லையில்லா அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர்.

36
Zee Tamil Serial Karthigai Deepam Latest Twist

சமீபத்தில் கூட கார்த்திக் தனது மனைவிக்கு காதல் சர்ஃப்ரைஸ் கொடுத்து அசத்தினார். ஆனால், பஞ்சாயத்து மூலமாக இருவருக்கும் எந்த உறவும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சட்டப்படி விவாகரத்து பெற வேண்டும் என்பதற்காக சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் டிராமா போட்டு கோர்ட்டுக்கு சென்றனர். கார்த்திக்கும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி, கோர்ட் மூலமாக 6 மாதம் காலம் ரேவதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

46
Danger to husband's life because of mother - Karthigai Deepam

அதன் பிறகு இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து வழங்கப்படும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி இப்போது கார்த்திக் தனது மாமியார் சாமுண்டீஸ்வரி வீட்டில் வாழ்ந்து வருகிறார். இருந்த போதிலும் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் தனித்தனி அறைகளில் தான் தங்கியிருக்கின்றனர். அந்த வீட்டில் கார்த்திக் ஒரு வேலைக்காரனாகத்தான் இருக்கிறார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் சீரியலில் 1133ஆவது எபிசோடில் தனது அம்மா கார்த்திக்கை துப்பாக்கியால் சுடுவது போன்று ரேவதிக்கு கனவு வந்துள்ளது.

56
Karthigai Deepam Today Episode Highlights,

அப்போது நேரம் காலை 4 மணி. அதிகாலையில் கனவு கண்டால் பழிக்கும் என்று சொல்வார்களே என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டே ஏன் சுடாதீங்க, எதற்கு சுட்டாங்க என்று புலம்புகிறார். பின்னர் கார்த்திக் ரூமிற்கு சென்று தனது கனவை பற்றி கூறுகிறார். அப்போது அத்தைக்கு என் மீது கோபம் இருப்பது உண்மை தான். ஆனால், சுடும் அளவிற்கு எல்லாம் போகமாட்டாங்க. அதனால் நீ கவலைப்படாத,. எனக்கு ஒன்றும் ஆகாது. அம்மாவும், சித்தியும் பார்த்தால் பிரச்சனை வந்துவிடும் என்று சொல்லி ரேவதியை அனுப்பி வைத்தார்.

66
அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்

அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் 1133ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஒரு வழியாக ரோகிணி மற்றும் மயில்வாகனத்தின் குழந்தை பிரச்சனை முடிவுக்கு வந்தது. அடுத்ததாக மயில்வாகனத்தின் ஹோட்டல் பிஸினஸ் ஆரம்பமாகும். இதை வைத்து சந்திரகலா மற்றும் சிவனாண்டி இருவரும் கேம் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மயில்வாகனம் ஹோட்டல் திறந்தாரா? கார்த்திக் என்ன செய்ய போகிறார் என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories