குழந்தையை விட அம்மாவின் உயிர் தான் முக்கியம் – ரோகிணியின் தியாகம் - கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!

Published : Feb 27, 2026, 03:00 PM IST

Rohini Chamundeshwari Love Emotional Scenes : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1133 ஆவது எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரிந்த நிலையில் ரோகிணிக்கு செய்ய இருந்த ஆபரேஷனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

PREV
15
கார்த்திகை தீபம் சீரியல் திருப்பம்

Rohini Chamundeshwari Love Emotional Scenes : தனது அம்மாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ரோகிணி கருவை கலைக்க துணிந்தார். இதற்காக டாக்டரின் காலில் கூட விழுந்து கருவை கலைக்க சம்மதிக்க வைத்தார். அவரும் வேறு வழியில்லாமல் கருவை கலைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஒரு கட்டத்தில் மயக்க ஊசி போட்டு ஆபரேஷனுக்கு டாக்டரும் தயாராக இருந்தார். அடுத்து என்ன நடந்தது என்று கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1133 ஆவது எபிசோடில் பார்க்கலாம்.

25
Rohini's Sacrifice for Mother

சரியான நேரத்திற்கு சாமுண்டீஸ்வரி ஆபரேஷன் தியேட்டருக்குள் வந்தார். அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லி ஆபரேஷனை தடுத்து நிறுத்தினார். இதைத் தொடர்ந்து மயக்க நிலையிலிருந்த ரோகிணி மயக்கம் தெளிந்த பிறகு தான் யாரிடமும் சொல்லாமல் கருவை கலைத்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டார். உங்களது உயிரைக் காப்பாற்றவே நான் கருவை கலைத்தேன். வேறு வழியே இல்லாமல் தான் இந்த முடிவை எடுத்தேன். குழந்தையை விட நீங்கள் தான் எனக்கு முக்கியம் என்றார். அப்போது மயில்வாகனமும் அங்கு வரவே அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு தான் கருவை கலைக்கவில்லை என்றும், ஜோதிடர் பொய் சொல்லியிருக்கிறார் என்றும் சாமுண்டீஸ்வரி தெளிவாக விளக்கினார். இனிமேல் இது நம்முடைய குடும்பத்தின் வாரிசு.

35
தாய்க்காக ரோகிணியின் தியாகம்

நாம் எல்லோரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம் என்று ரோகிணியிடம் சாமுண்டீஸ்வரி கூறினார். ராஜராஜனும் இது எல்லாவற்றிற்கும் காரணம் சின்ன மாப்பிள்ளை தான். அவர் தான் ஜோதிடரைப் பற்றிய எல்லா உண்மைகளையும் கண்டுபிடிக்க காரணமாக இருந்தார் என்று அவரை பெருமையாக பேசினார். அவர் மட்டும் இல்லை என்றால், நீயும் குழந்தையை இழந்திருப்பாய். சாமுண்டீஸ்வரியும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள் என்றார். ரோகிணியும் அவருக்கு நன்றி கூறினார். அப்போது மயில்வாகனம் தனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் ஓகே தான். அதுலயும் இரட்டை குழந்தை பிறந்தாலும் ரொம்பவே மகிழ்ச்சி என்றார்.

45
Zee Tamil Serial Latest News

இது எல்லாத்துக்கும் காரணமாக இருந்த அந்த சிவனாண்டியை போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்றார் மயில்வாகனம். அப்போது மாப்பிள்ளை போலீசில் எல்லாம் பிடித்து கொடுக்க கூடாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து குழந்தையின் புகைப்படத்தில் மீண்டும் வீ லவ் யூ என்று எழுதி சந்தோஷப்பட்டார். கடைசியாக கார்த்திக்கை துப்பாக்கியால் சுடுவது போன்று ரேவதிக்கு கனவு வந்தது. அப்போது நேரம் காலை 4 மணி. சுடாதீங்க, ஏன் அம்மா சுட்டீங்க என்று கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்து கார்த்திக் ரூமிற்கு சென்று தனது கனவை பற்றி கூறுகிறார்.

55
ஜீ தமிழ் சீரியல் செய்திகள்

அப்போது அத்தைக்கு என் மீது கோபம் இருப்பது உண்மை தான். ஆனால், சுடும் அளவிற்கு எல்லாம் போகமாட்டாங்க. அதனால் நீ கவலைப்படாத,. எனக்கு ஒன்றும் ஆகாது. அம்மாவும், சித்தியும் பார்த்தால் பிரச்சனை வந்துவிடும் என்று சொல்லி ரேவதியை அனுப்பி வைத்தார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories