ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Apr 22, 2026, 08:36 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக ஒரு வேலையை பார்த்திருக்கிறார் ராவணன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தனது போனுக்கு கதிர் நம்பரில் இருந்து கால் வந்ததாகவும் அவர்தான் தன்னை அங்கும் இங்கும் அலைய வைத்து கேம் ஆடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதைக் கேட்டு கடுப்பான கதிர் தன்னுடைய போனை எடுத்துக் கொடுத்து வேண்டுமென்றால் இதை செக் செய்து கொள்ளுமாறு கொடுத்து விடுகிறார். அதன் பின்னர் சக்தி தன்னுடைய நண்பன் ஒருவனின் உதவியுடன் கதிரின் போனை ட்ராக் செய்து பார்த்தபோது அதிலிருந்து ஜனனியின் ஃபோனுக்கு எந்தவித காலும் வரவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சகுனி வேலையை ஆரம்பித்த ராவணன்

ஜனனியை தனியாக அழைத்து பேசிய ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். அப்போது அவரிடம் தான் இந்த வீட்டை விட்டு சில நாட்கள் வெளியே செல்வதாக கூறுகிறார். பின்னர் மறுநாள் காலையில் சக்தியுடன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனனி. இதையடுத்து நேராக மதிவதினியின் வீட்டுக்கு செல்லும் ஜனனி அங்கு அவரிடம் நடந்த பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக் கூறுகிறார். மதிவதினி வீட்டில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துள்ள ராவணன் இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒட்டு கேட்கிறார். இதை வைத்து ராவணன் தன்னுடைய சகுனி வேலையை ஸ்டார்ட் பண்ணுகிறார்.

35
வீடியோவை அனுப்பிய ராவணன்

அந்த வீடியோ ஆதாரம் கிடைத்ததும் ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என ஜனனி பேசியதை எடிட் செய்து ஆதி குணசேகரனின் போனுக்கு அனுப்பி வைக்கிறார் ராவணன். அந்த வீடியோவை பார்த்து ஷாக்கான குணசேகரன் அதை தன் மனைவி ஈஸ்வரியிடமும் காட்டுகிறார். இதைப் பார்த்து கடுப்பாகும் ஈஸ்வரி ஏன் இந்த ஜனனி இப்படி கொலை வெறியோடு இருக்கிறார் என கேட்க, ஆதி குணசேகரன் தன் பங்கிற்கு ஜனனி பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்லி அவள் இந்த வீட்டில் யாருமே நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த வேலையெல்லாம் செய்கிறாள். அவளை இனி நாம் இந்த வீட்டுக்குள் சேர்க்கவே கூடாது என கொளுத்தி போடுகிறார்.

45
புத்திமதி சொல்லும் மதிவதினி

ஜனனிக்கு அட்வைஸ் பண்ணும் மதிவதினி, நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தது மிகப்பெரிய தவறு எனக் கூறுகிறார். இப்போ நீங்க வெளியே வந்ததால் உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என நினைத்துக் கொள்வார்கள். அதனால் நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது தான் சரி என கூறுகிறார். இதையடுத்து ஜனனியும் சக்தியும் மீண்டும் வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை எல்லாம் ராவணன் தன்னுடைய ரகசிய கேமரா மூலம் பார்த்துக் கொண்டே இருந்து, நான் ஆதி குணசேகரன் பழிவாங்கும் முன்னர் ஜனனிக்கும் அவருக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க உள்ளதாக கூறுகிறார்.

55
ஜனனி - ஈஸ்வரி இடையே வெடிக்கும் மோதல்

ஜனனி தன் கணவரை பழிவாங்க பிளான் பண்ணுவதை அறிந்த ஈஸ்வரி, இனி அவளை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார். மதிவதினி பேச்சைக் கேட்டு ஜனனி மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது தான் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஜனனியை ஈஸ்வரி வாசலிலேயே தடுத்து நிறுத்தி, இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என கூறவும் வாய்ப்பு உள்ளது. ராவணன் எதிர்பார்த்தபடியே ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே புது பகை வெடிக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக இனிவரும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதி. அதில் உள்ள டிவிஸ்ட் களை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories