பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். திவாகர், சபரி, நந்தினி, சுபி, விஜே பார்வதி, கனி, எஃப் ஜே, அரோரா, அகோரி கலையரசன், இயக்குனர் பிரவீன் காந்தி, ரம்யா ஜோ, கானா வினோத், அப்சரா, ஆதிரை, வியானா, விக்கல்ஸ் விக்ரம், கெமி, கம்ருதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் உள்ளே சென்ற முதல் நாளில் இருந்தே ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவிலும் சண்டை போடுவது போன்ற காட்சிகள் தான் இடம்பெற்று உள்ளன.