Pandian Stores 2 S2 E689: தங்கமயில் அணிந்திருந்தது கவரிங் நகை என மீனா போலீசில் வாக்குமூலம் அளிக்க, விவகாரம் பெரிதாகிறது. தன் தாய் பாக்கியத்தின் மிரட்டலால் தங்கமயில் பொய் சொன்னாலும், ஒரு வீடியோ ஆதாரம் கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
Pandian Stores 2 S2 E689: இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட், காவல்நிலையத்தில் தொடங்குகிறது. தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்தின் போதே, தங்கமயில் அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தனக்குத் தெரியும் என்று மீனா போலீசார் உள்ளிட்ட அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார். பாக்கியம் இதை மறைக்க முயன்றாலும், மீனாவும் ராஜியும் உறுதியாக நிற்கின்றனர். குறிப்பாக, பாக்கியமும் அவரது கணவரும் இது குறித்துத் தனியாகப் பேசிக் கொண்டதை தான் கேட்டதாக ராஜி சாட்சி சொல்கிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைகின்றனர்.
26
போலீஸ் விசாரணை மற்றும் பாக்கியத்தின் பிடிவாதம்
விஷயம் போலீஸ் வரை செல்ல, பாக்கியம் தனது தரப்பு நியாயத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. 80 பவுன் நகை கொடுத்தது உண்மை என்றும், பாண்டியன் குடும்பத்தினர் திட்டமிட்டுப் பொய் சொல்வதாகவும் அவர் வாதிடுகிறார். ஆனால் மீனா, போலி நகை கொடுத்ததற்குத் தானும் ராஜியுமே சாட்சி என்று போலீசாரிடம் தைரியமாகக் கூறுகிறார். மேலும், தங்கமயிலின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு காலம் உண்மையை மறைத்ததாக அவர் விளக்குகிறார்.
36
பாண்டியன் குடும்பத்தின் அதிருப்தி
இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்ததற்காக மீனா மற்றும் ராஜி மீது பாண்டியனும் அவரது மனைவியும் கோபம் கொள்கின்றனர். "மூன்று மருமகள்களும் சேர்ந்து எதையெல்லாம் மறைக்கிறீர்கள்?" என்று பாண்டியனின் மனைவி ஆவேசமாகக் கேட்கிறார். குடும்பத்திற்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி அவர்களைத் திட்டினாலும், மற்றவர்கள் நிலைமையைச் சமாளித்து அவர்களை அமைதிப்படுத்துகின்றனர்.
போலீஸ் நிலையத்திற்கு வரும் தங்கமயிலிடம், பாக்கியம் தனிமையில் பேசுகிறார். தாலி பிரித்துக் கோர்க்கும் போது நடந்த எதையும் போலீசாரிடம் சொல்லக்கூடாது என்றும், உண்மையைச் சொன்னால் சரவணனுடன் வாழும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும் மிரட்டுகிறார். மேலும், நகை விவகாரத்தில் சிக்கினால் தாங்கள் கைதாக நேரிடும் என்று கூறி பாக்கியம் கெஞ்சுகிறார். இதனால் தங்கமயில் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்.
56
ஸ்டேஷனில் நடந்த நாடகம்
போலீஸ் விசாரணையின் போது, தங்கமயில் தனது அம்மாவின் பேச்சைக் கேட்டுப் பொய் சொல்கிறார். தான் அணிந்திருந்தது 80 பவுன் அசல் தங்க நகைதான் என்றும், மீனா மற்றும் ராஜி சொல்வது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் மீனா மற்றும் ராஜி கடும் அதிர்ச்சியடைகின்றனர். மயில் தன்னை நிரபராதி போலக் காட்டிக்கொள்வது மீனாவை இன்னும் ஆத்திரப்படுத்துகிறது.
66
கிளைமாக்ஸ்: ஆதாரத்தை வெளியிட்ட மீனா - ராஜி
தங்கமயில் தொடர்ந்து பொய் பேசவே, இறுதியாக மீனா மற்றும் ராஜி ஒரு அதிரடித் திருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். தாலி பிரித்துக் கோர்க்கும் அன்று மொட்டை மாடியில் இவர்கள் மூவரும் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மீனா கூறுகிறார். இதனால் பாக்கியம் குடும்பத்தினர் நிலைகுலைந்து போகின்றனர். சரவணன் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையானால் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி மீனா கூற, தங்கமயில் கண்ணீருடன் சரவணனைப் பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.