Pandian Stores 2 Today 552nd Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மகளை எல்லோரும் இப்படி பேசுவது தெரிந்து கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
Pandian Stores 2 Today 552nd Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. அப்பா, மகன், மகள் என்று குடும்பக் கதையை மையப்படுத்திய இந்த சீரியலானது குடும்ப ஆடியன்ஸையும், காதல் ஜோடிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 552ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். வடிவிற்கு ஆதரவாக பேசி வந்த மாரி இப்போது தனது மகன் குமாரு ஜெயிலுக்கு சென்ற நிலையில் மன வருத்தத்தில் இருக்கிறார். அதோடு இப்போது கணவருக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துவிட்டார்.
24
கதிர் மற்றும் ராஜீ
இது வடிவிற்கு சற்று ஏமாற்றமாக அமைந்துவிட்டது. நேற்றைய எபிசோடில் ராஜீ, தனது அப்பாவை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதனை சற்று தொலைவிலிருந்து சக்திவேல் பார்த்தார். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தவே வீட்டிற்கு வந்து அப்பாவும் மகளும் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். மருமகனை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டியது தான் என்று அப்படி இப்படி என்று பேசினார். இதைத் தொடர்ந்து பாண்டியன் தனது மகன்கள் என்ன பிளான் வைத்திருக்கிறார்கள் என்று பேசினார். இதில் கதிர் என்ன செய்ய போகிறார், வங்கி லோன் கிடைக்குமா கிடைக்காது என்று பேசினார். அதெல்லாம் கிடைக்கும் என்று கதிர் பேசினார்.
34
அரசி மற்றும் பாண்டியன்
இதைத் தொடர்ந்து தனது கணவரைப் பற்றி அப்படி இப்படி பேசிய கோமதி, உடனே பாண்டியன் வருவதைப் பார்த்ததும் பேச்சை மாற்றினார். மேலும் உங்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறேன் என்று சொன்னார். பாண்டியன் தனது மூத்த மருமகளுக்கு பழங்களும் 2ஆவது மற்றும் 3ஆவது மருமகள்களுக்கு வடையும் வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
44
மகளின் வாழ்க்கைக்காக முக்கிய முடிவு எடுத்த பாண்டியன்
இறுதியாக அரசியைப் பற்றி எல்லோரும் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்ட பாண்டியன் இனிமேல் அப்படி பேச மாட்டார்கள் என்று அதற்கு ஒரு முடிவு கட்ட பிளான் போட்டு மைக் செட் கட்டியபடி இருக்கும் ஆட்டோவை வீட்டு வாசலில் நிற்க வைத்துள்ளார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 553ஆவது எபிசோடில் பார்க்கலாம்.