சினிமா, ஹோட்டல் என்று அவர்களது காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் குமரவேலுவைப் பற்றிய உண்மைகள் தெரிய வர அரசி அவரிடமிருந்து விலக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அரசியை கடத்திச் செல்கிறார் குமரவேல். அரசிக்கு நடக்க இருந்த திருமணத்திற்கு முன்னதாக அவரை கடத்திச் சென்ற நிலையில் மறுநாள் அரசியுடன் குமரவேல் வீட்டிற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து தன்னை மட்டுமின்றி தனது குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு குமரவேலுவை சித்திரவதை செய்கிறார்.
குமரவேலுவின் காரணமாக அரசி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், இதில் நான் எதுவும் தலையிட முடியாது என்றார். ஒரு கட்டத்தில் கதறி அழுத மாரி, ராஜீயின் காலில் விழுந்து அழுதார். எனினும், ராஜீ தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று காலை விரித்துள்ளார்.
உண்மையில் ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வந்த குமரவேல் இப்போது கொஞ்சம் மனம் திருந்தியிருக்கிறார். ராஜீயை தனியாக பார்த்து பேசியிருக்கிறார். அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொல் என்று கூறியிருக்கிறார். அரசியிடம் பேச முயற்சி செய்துள்ளார். மேலும், கதிர் மற்றும் ராஜீ இருவரும் உடற்பயிற்சி செய்யும் போது அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ந்துள்ளார்.