சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளுடன் தர்ஷனின் திருமணத்திற்காக மண்டபம் புக் செய்ய கிளம்பிச் செல்கிறார்கள். அப்போது வெளியே ஒளிந்திருந்த ஜனனி, நந்தினி, தர்ஷினி மற்றும் ரேணுகா, பின்னர் வீட்டுக்குள் சென்று கேட்டை பூட்டு போட்டு பூட்டிவிட்டு, உள்ளே செல்கிறார்கள். அப்போது வீட்டின் கதவை அறிவுக்கரசி லாக் செய்திருப்பதை அறிந்ததும், தர்ஷினி, கயிறு கட்டி மாடி வழியாக ஏறி உள்ளே சென்று கதவை திறந்துவிடுகிறார். அனைவரும் சேர்ந்து அறிவுக்கரசி ரூமின் கதவை தட்டுகிறார்கள்.
24
ஆதாரத்தை அழிக்க முயலும் அறிவு
ஆதாரம் அடங்கிய போன் கையில் இருந்ததால் வெடவெடத்துப் போகும் அறிவு, அதை தன் இடுப்பில் சொறுகிக்கொண்டு கதவை திறக்கிறார். முதலில் போனை எங்கே என சைலண்டாக கேட்கிறார்கள். அதற்கு அறிவு செவிசாய்க்காததால், அவரை இழுத்துப் போட்டு அடிக்கிறார் தர்ஷினி. பின்னர் கையை கட்டி, கழுத்தை நெறிக்கிறார்கள். இப்படி வீட்டில் அறிவுக்கரசியை அனைவரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பணத்தை மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் வீட்டுக்கு வருகிறார் ஆதி குணசேகரன். அப்போது தன்னிடம் இருக்கும் செல்போனை எடுத்து ஜனனியிடம் கொடுப்பது போல் வந்து, அதை வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார் அறிவு.
34
ஆதி குணசேகரனுக்கு வந்த டவுட்
அந்த போன் மீது கார் ஏறிவிடுகிறது. பின்னர் ஓடி வந்து அதை கையில் எடுக்கும் தர்ஷினி, போன் உடைந்துவிட்டதாக கூற, அருகில் இருக்கும் ஆதி குணசேகரன் வெடுக்கென அந்த போனை பிடுங்குகிறார். அதில் என்ன இருக்கு என கேட்க, ஜனனி அதில் ரகசியம் இருப்பதாக சொல்கிறார். பின்னர் செல்போன் ஹேக்கரான கரிகாலனின் நண்பன் ஒருவர் வருகிறார். அவர் வந்து அந்த போனில் உள்ள ஆதாரங்களை மீட்கும் வேலைகளில் இறங்குகிறார். இதற்கெல்லாம் அறிவுக்கரசி முட்டுக்கட்டை போட முயல்கிறார். இதனால் ஆதி குணசேகரனுக்கு அறிவுக்கரசி மீது சந்தேகம் அதிகரிக்கிறது.
போனை சரிபார்க்க எடுத்துச் சென்ற நிலையில், வீட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா மாட்ட முடிவு செய்கிறார் ஆதி குணசேகரன். இதற்காக ஆள் ஒருவரை வரவைத்து ஹாலில் ஒன்று, கேட்டில் ஒன்று, மாடியில் ஒன்று என சிசிடிவி மாட்டுவதற்கான இடத்தை சொல்கிறார். இதனால் இனி எந்த வித தில்லுமுல்லு வேலையும் செய்ய முடியாதே என ஷாக் ஆகிறார் அறிவுக்கரசி. இதன்பின் என்ன ஆனது? போனில் இருக்கும் ஆதாரம் ஆதி குணசேகரனிடம் சிக்கியதா? அறிவுக்கரசியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.