எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஈஸ்வரியை, ஆதி குணசேகரன் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் அறிவுக்கரசியிடம் இருப்பதை ஜனனி கண்டுபிடித்து, அதை எடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கிறார். அதன்படி அறிவுக்கரசியின் போனை அபேஸ் பண்ணி அதில் பார்த்தபோது எந்த ஆதாரமும் சிக்கவில்லை. ஆனால் அவர் தன்னிடம் உள்ள மற்றொரு போனில் அந்த ஆதாரங்களை ஒளித்து வைத்திருக்கிறார். ஜனனிக்கு தன் மீது சந்தேகம் வந்ததால் உஷாரான அறிவுக்கரசி, தன்னிடம் உள்ள ஆதாரத்தை வேறு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
24
பரிகாரத்திற்கு 80 லட்சம்
இதையடுத்து பணிக்கர் என்கிற ஜோதிடரிடம் பரிகாரம் செய்வது குறித்து பேச செல்கிறார் குணசேகரன். அப்போது அறிவுக்கரசியும் அவருடன் சென்றிருந்தார். அங்கு சென்றபின்னர் பரிகாரம் செய்வதற்கு 80 லட்சம் செல்வாகும் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் பணிக்கர். இதற்கு அறிவுக்கரசி, கதிர் ஆகியோர் சம்மதிக்காமல் இருக்க, ஆதி குணசேகரன், அதனை செய்ய சம்மதிக்கிறார். மேலும் அதற்காக மண்டபம் பிடிக்கவும் முடிவு செய்கிறார். அந்த மண்டபத்தை பார்க்க அறிவுக்கரசியை அழைக்கிறார் குணசேகரன். வீட்டை விட்டு சென்றுவிட்டால் தம்மிடம் இருக்கும் ஆதாரத்தை ஜனனி எடுத்துவிடுவார் என்கிற பயத்தில் குணசேகரனுடன் செல்ல மறுக்கிறார் அறிவு.
34
அறிவுக்கரசியை அடி வெளுத்த தர்ஷினி
குணசேகரன் வீட்டை விட்டு கிளம்பியதும், ரூமுக்குள் சென்று மறைத்து வைத்திருந்த போனை எடுத்து அறிவுக்கரசி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஜனனி, தர்ஷினி ஆகியோர் வந்து ரூம் கதவை தட்டுகிறார்கள். இதனால் கதிகலங்கிப் போன அறிவு, கதவைத் திறந்ததும் அவரிடம் இருக்கும் ஆதாரத்தை கேட்கின்றனர். அறிவு தங்கள் வழிக்கு வராததால், டென்ஷன் ஆன தர்ஷினி, கோபத்தில் அறிவுக்கரசியை கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிடுகிறார். பின்னர் அறிவுக்கரசியிடம் இருக்கும் போனை அவர்கள் எடுக்க முயன்றபோது அதை வெளியே தூக்கிப் போட்டுவிடுகிறார் அறிவுக்கரசி.
அவர் போனை தூக்கிப் போட்ட சமயத்தில் ஆதி குணசேகரனும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அப்போது போனை எடுத்த தர்ஷினி, அது உடைந்துவிட்டதாக ஜனனியிடம் கூறியபோது, அவரிடம் இருந்து போனை பிடுங்கி விடுகிறார் குணசேகரன். அதுல என்ன இருக்கு என கேட்டதும், ஏதோ ரகசியம் இருக்கு என சொல்கிறார். தற்போது அறிவுக்கரசியிடம் இருந்த ஆதாரம் ஆதி குணசேகரனிடம் சிக்கி உள்ளதால், அவர் அதைப் பார்த்தால் என்ன நடக்கும்? அந்த வீடியோ அடங்கிய போனை ஜனனி மீட்பாரா? அடுத்து என்ன நடக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.