எஸ்கேப் ஆன ரகு... அன்புவின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட மித்ரா..! தீப்பறக்கும் திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

Published : Aug 26, 2025, 02:57 PM IST

சிங்கப்பெண்ணே சீரியலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரகு தப்பித்து சென்ற நிலையில், என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Singappenne serial Today Episode

சன் டிவியின் நம்பர் 1 சீரியலான சிங்கப்பெண்ணே, அனல்பறக்கும் திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்க அன்பு தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதற் படியாக, ஆனந்திக்கு மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸை கொடுத்த ரகுவை தேடிக் கண்டுபிடித்த அன்பு, அவனை துரத்திப் பிடிக்க முயன்றபோது, எதிர்பாரா விதமாக விபத்தில் சிக்கி விடுகிறான். இதையடுத்து ரகுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

24
அன்புக்கு சப்போர்ட் பண்ணும் துளசி

ரகுவுக்கு ஆபரேஷன் செய்ய 3 லட்ச ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் சொன்னதை அடுத்து, அந்த பணத்தை புரட்ட அன்புவும், ஆனந்தியும் செல்கிறார்கள். அப்போது துளசியிடம் இருக்கும் நகைகளை கேட்கிறார் அன்பு. இதையடுத்து துளசியும் அந்த நகைகளை அன்புக்கு எடுத்துக் கொடுக்கிறார். அப்போது குறுக்கே வரும் அன்புவின் அம்மா, நீ அவளை கல்யாணம் செய்துகொள்வேன் என சத்தியம் செய்து கொடுத்துவிட்டு நகையை வாங்கிச் செல் என முட்டுக்கட்டை போடுகிறார். பின்னர் அவரிடம் பேசி, அன்புவுக்கு அந்த நகைகளை கொடுத்து அனுப்பி விடுகிறார் துளசி.

34
எஸ்கேப் ஆகும் ரகு

மறுபுறம் ரகு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கருணாவை மாஸ்க் போட்டு மாறு வேடத்தில் அனுப்பி வைக்கும் மித்ரா, அங்கிருந்து ரகுவை கடத்தி வரச் சொல்கிறார். கருணா ரகுவை கடத்திச் செல்ல ஸ்ட்ரெட்சரை எடுக்க சென்ற கேப்பில் ரகுவுக்கு நினைவு திரும்புகிறது. இதையடுத்து எழுந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற ரகுவை இழுத்துச் சென்று மித்ராவின் காரில் ஏற்றுகிறார் கருணா. பின்னர் மூவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்கள். பின்னர் ரகுவிடம், நீ கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில் தலைமறைவாக இரு என சொல்கிறார் மித்ரா. பிரச்சனையை ஆரப்போடுவதற்காக இப்படி செய்வதாக கூறுகிறார் மித்ரா.

44
சபதம் எடுக்கும் ஆனந்தி

மறுபுறம் ரகு ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்கேப் ஆனது ஆனந்திக்கு தெரியவருகிறது. மாஸ்க் போட்டு வந்த ஒரு நபர் ரகுவை கூட்டிச் சென்றதாக கூறுகிறார். இதையடுத்து செய்வதறியாது திக்குமுக்காடிப் போகும் ஆனந்தி, உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை, எனக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவனை நான் தேடிக்கிட்டே இருப்பேன் என தெய்வத்தின் முன் சபதம் எடுக்கிறார். அன்புவும் குழம்பிப் போகிறார். இதையடுத்து ரகு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாரா? அன்புவும், ஆனந்தியும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? மித்ராவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது போன்ற அனல்பறக்கும் திருப்பங்களுக்கான விடை இனி வரும் எபிசோடுகளில் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories