சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

Published : Mar 05, 2026, 08:36 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனிடம் தான் கரப்பமாக இருக்கும் விஷயத்தை தங்கமயில் சொன்னதும் அவர் சந்தேகப்பட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், கோவிலில் சரவணனை சந்தித்து தங்கமயில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன நிலையில், இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் மீனா கோவிலுக்கு வெளியே காத்திருக்க, சரவணன் தங்கமயிலிடம் சண்டைபோட்டு விட்டு கோவிலின் வெளியே வந்து பார்க்கும் போது மீனாவிடம் நீ தான் இதற்கெல்லாம் காரணமா, நான் கூட நீ அவசரமா வரச்சொன்னதும், உனக்கும் செந்திலுக்கும் சண்டையா என பயந்து வந்தேன். ஆனா நீ இங்க வந்து இவள பார்க்க வச்சிருக்க, இனிமே இப்படியெல்லாம் பண்ணாத என திட்டிவிட்டு கிளம்புகிறார்.

25
மீனாவிடம் கண்ணீர் விட்டு அழும் தங்கமயில்

சரவணன் சென்றதும் விறுவிறுவென கோவிலுக்குள் செல்லும் மீனா, அங்கு சென்று தங்கமயிலை பார்க்க, அவர் அழுதுகொண்டே மீனாவை கட்டிப்பிடிக்கிறார். நான் எவ்வளவு சொல்லியும் மாமா நம்பவே இல்ல அக்கா என ஃபீல் பண்ணுகிறார். நான் டாக்டர் கொடுத்த சீட்டை காட்டியும் அவர் நம்பவில்லை. அவர் நம்பாதது கூட பரவாயில்லை. ஆனால் என்னை சந்தேகப்பட்டு ஒரு கேள்வி கேட்டார் அதைமட்டும் என்னால் ஏத்துக்கவே முடியல அக்கா என தங்கமயில் சொல்ல, அப்படி என்ன கேட்டார் என மீனாவும் கேட்கிறார். இது எவனோட குழந்தைனு கேட்டுட்டார் அக்கா, என கதறி அழுதார் தங்கமயில்.

35
வீட்டில் நடக்கும் கூத்து

இதையடுத்து தங்கமயிலை வீட்டுக்கு அழைத்து செல்கிறார் மீனா. அங்கு பாக்கியமும், அவரின் கணவரும் மகளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். தங்கமயில் வீட்டுக்கு வந்ததும் அவர்களிடம் எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்றுவிடுகிறார். பின்னர் மீனாவிடம் பாக்கியம் என்ன ஆச்சு என துருவி துருவி கேள்வி கேட்கிறார். நான் இதோ வருகிறேன் என சொல்லிவிட்டு, தங்கமயிலின் ரூமுக்கு சென்றுவிடுகிறார் மீனா. அங்கு சென்று மாமா எதாச்சும் கோபத்துல அப்படி பேசிருப்பாரு, நீ அதையெல்லாம் நினைத்து கவலைப்படாத மயிலு என சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.

45
அதிரடி முடிவெடுத்த தங்கமயில்

உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல், பாக்கியம் கதவை தட்ட, அருகில் இருந்த அவரது கணவர், மயிலு அவளோட மாமியார் வீட்டுக்கு போறதுக்காக துணியை பேக் பண்ணிட்டு இருப்பாலோ என யோசிக்கிறார். பின்னர் மீனாவிடம் தான் ஒரு முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார் தங்கமயில். இனி எனக்கும் அவருக்கு சம்மந்தமே இல்லை. நான் இனிமேல் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன். அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்திருக்கிறேன் என சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன மீனா, தங்கமயிலிடம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத அத்தை வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லுவோம் என கூறுகிறார் மீனா.

55
மீனாவிடம் சத்தியம் வாங்கிய மயில்

அதற்கு வேண்டவே வேண்டாம் என சொல்லும் தங்கமயில், இந்த விஷயத்தை மாமா எப்படியும் அவங்க அம்மாகிட்ட சொல்ல மாட்டாரு. அதனால நீங்களும் யார்கிட்டையும் சொல்ல வேண்டாம் என மீனாவிடம் சத்தியம் வாங்குகிறார். போகிற போக்கை பார்த்தால் தங்கமயில், சரவணனுக்கு விவாகரத்து கொடுத்துவிடுவார் போல தெரிகிறது. தங்கமயிலின் பேச்சை மீறி மீனா இந்த மேட்டரை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதையடுத்து என்னென்ன அதிரடி திருப்பங்கள் வரப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories