அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் புதிதாக தொடங்க உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியன் புதிதாக கடை திறக்க உள்ள நிலையில், வானதி அவருடன் சேர்ந்து கடையை தயார் செய்துகொண்டிருக்கிறார். அதன்பின்னர் நிலாவும், சோழனும் பாண்டியனிடம் கடைக்கு என்ன பெயர் வச்சிருக்க என கேட்கிறார்கள். அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் பாண்டியன். பின்னர் வானதியும் அதை கேட்கிறார். அவரிடமும் சொல்ல மறுத்துவிடுகிறார் பாண்டியன். பின்னர் நிலா, சோழன் இருவரும் வீட்டுக்கு நடந்து செல்லும் போது, உங்க அண்ணனும் லவ் பண்ணுகிறார், தம்பியும் லவ் பண்ணுகிறார். உங்க வாழ்க்கையில் தான் லவ் இல்லையா என கேட்கிறார் நிலா.
24
சோழனிடம் போட்டு வாங்கும் நிலா
அதற்கு சோழன், என்னோட வாழ்க்கையில் லவ்வே இல்லை, நான் எல்லா பொண்ணுகளுடனும் பேசுறேன்னு சொல்லுவாங்க, ஆனால் என் வாழ்க்கையில் ஒன்னுமே இல்ல என புலம்புகிறார். அப்போது நிலா, வேண்டுமென்றால் நீங்க ஒரு பொண்ணை பார்த்து லவ் பண்ணுங்க என சொல்லி சோழனை வெறுப்பேற்றுகிறார். உங்களை மாதிரி நானும் ஒரு பையனை லவ் பண்ணனும் என சொல்கிறார் நிலா. அவரின் இந்த பேச்சைக் கேட்டு சோழன் செம டென்ஷன் ஆகிறார். வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதற்காக தான் நிலா இப்படி செய்கிறார் என உணர்ந்த சோழன், அப்படியே பேசிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
34
நடேசனுக்கு என்ன ஆச்சு?
இரவு தூங்கும்போது நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. இரவு வீட்டின் வெளியில் பணியிலேயே படுத்து தூங்குவது அவருக்கு செட் ஆகவில்லை. இதைப் பார்த்த நிலா, ஒழுங்கு மரியாதையா உள்ள வந்து படுங்க, இல்லேனா கட்டிலோட தூக்கிட்டு போயிடுவேன் என சொன்னதும் நடேசன் உள்ளே சென்று தூங்குகிறார். மறுநாள் காலையில் அனைவருமே பாண்டியனோட கடை திறப்பு விழாவுக்காக கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன் டிப் டாப் ஆக கிளம்பி இருக்க, உள்ளே வந்து அவரை பார்க்கும் நடேசன், என்னடா டிரஸ் இது பைத்தியக்காரன் மாதிரி இருக்கு என சொல்லிவிடுகிறார். இதனால் வேறு டிரஸ்ஸை மாற்றுகிறார் சோழன்.
பின்னர் பாண்டியனும் வேட்டி, சட்டையுடன் வெளியே வருகிறார். மறுபுறம் நிலாவும் சேலை அணிந்துவிட்டு வருகிறார். பின்னர் பாண்டியனிடம், வானதி உனக்கு ஆசை ஆசையாய் வாங்கி கொடுத்த சட்டையை போடாம ஏன் இதை போட்டிருக்க என நிலா கேட்டதும், பாண்டியன் அந்த டிரஸ்ஸை மாற்ற செல்கிறார். இதன்பின்னர் என்ன ஆனது? பாண்டியனின் கடை திறப்பு விழா வெற்றிகரமாக நடந்ததா? கடைக்கு பாண்டியன் தன் பெயரை வைத்திருப்பார் என எதிர்பார்க்கும் வானதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் தான் விடை கிடைக்கும்.