பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைக்க அவரது அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் திட்டமிட்டனர். இதற்காக இடத்தையும் பார்த்து வைத்துவிட்டனர். இன்னும் 2 நாட்களில் கடை திறப்பு விழாவும் நடக்க இருக்கிறது. சொந்தமாக கடை வைப்பது பற்றி பழனிவேல் அவரது அக்கா மற்றும் மச்சானிடம் சொல்லாத நிலையில் தனது மகனுக்காக காந்திமதி மகளிடமும், மருமகனிடமும் பேசியுள்ளார்.
28
பழனிவேல், சுகன்யா
எப்படியும் வரும் வாரங்களில் பழனிவேலுவின் கடை திறப்பு விழா காட்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது அண்ணன்கள் தனக்கு சொந்தமாக கடை வைத்துக் கொடுக்கிறார்கள் என்று தனது அக்காவிடம், மச்சானிடம் சொல்ல முடியாமல் தவித்த காட்சிகள் ரசிகர்களுக்கு புரியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கோமதி புரிந்து கொள்ளவில்லை.
38
சொந்தமாக கடை திறக்கும் பழனிவேல்
பழனிவேலு இத்தனை நாட்களாக தனது அக்காவும், மச்சானும் தன்னை அவர்களது மகன்களாக பார்த்து வளர்த்த நிலையில் இனிமேல் தனியாக செல்ல போகிறேன் என்று எப்படி சொல்ல மனசு வரும் என்று அவர் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், பெத்த பாசம் காந்திமதி, தனது மகளிடமும், மருமகனிடமும் சொல்லிவிட்டார். செந்தில் அரசு வேலைக்கு சென்றுவிட்டான், கதிரும் டிராவல்ஸ் வைத்துவிட்டான், சரவணனும் கடையில் வேலை பார்க்கிறான்.
48
பாண்டியன், கோமதி
ஆனால், பழனிவேல் அப்படியே இருந்துவிட முடியாது அல்லவா. அவனை நம்பியும் ஒரு பெண் வந்துவிட்டாள். அப்படியிருக்கும் போது இன்னும் எத்தனை நாட்கள் தான் உங்களை நம்பி கடையில் வேலை பார்ப்பான் என்று வருத்தமாக சொல்லி கடைசியில் அவனுக்கு அவனது அண்ணன்கள் சொந்தமாக கடை வைத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள். அதற்கு மட்டும் நீங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
58
காந்திமதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இது குறித்து பழனிவேலுவிடம் கோமதி கேட்க, இதைப் பற்றி என்னிடமே நீ சொல்லியிருக்கலாம். ஏன், அம்மாவை வைத்து சொல்ல வைத்தாய் என்று பழனிவேலுவிடம் கோமதி கோபித்துக் கொண்டார். கடைசியில் நீ கடை வைப்பது எங்களுக்கு சம்மதம் தான். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே, என்று ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து பாண்டியனும், நீ வேலையை நன்றாக கற்றுக் கொண்ட பிறகு உனக்கு நாங்களே ஏதாவது செய்து கொடுக்கணும் என்று நினைத்தோம். ஆனால், அதற்குள்ளாக உங்களது அண்ணன்களே கடை வைத்துக் கொடுக்கிறார்கள்.
68
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
நீ நல்லபடியாக முன்னுக்கு வந்தால் அதுவே போதும் என்று கூறினார். பழனிவேலுவைத் தொடர்ந்து சுகன்யாவும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். ஏனென்றால் பாண்டியனும், கோமதியும் தனது கணவர் சொந்தமாக கடை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று சந்தோஷப்பட்டார்.
78
கடை திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்த அண்ணன்கள்
ஆனால், என்ன கடை என்று இதுவரையில் யாரும் பேசவில்லை. அதில் சீரியல் இயக்குநர் கொஞ்சம் டுவிஸ்ட் வைத்திருக்கிறார். பழனிவேலுவின் அண்ணன்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். எப்படியாவது பழனிவேலுவை தங்களது பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பாண்டியனை பழி வாங்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளனர். அதற்கு முதல்படியாக இப்போது பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது.
88
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இது எப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்று பெரிய கடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பழனிவேல் மீது பழி சுமத்திய பாண்டியனுக்கு இப்போது இந்த கடையை பார்த்து ஷாக் கொஞ்சம் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், என்ன கடை, என்ன நடக்கும் என்று அடுத்த வாரம் வரையில் காத்திருந்து பார்க்கலாம்.