யாருக்கு யார் சித்தப்பா? தங்கமயிலை லெஃப்ட் ரைட்டு வாங்கிய பழனிவேல்: கோர்ட் வாசலில் நடந்த சண்டை!

Published : Jan 06, 2026, 06:05 PM IST

Palanivel and Thangamayil Fight in Court : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேலுவை சித்தப்பா என்று தங்கமயில் கூப்பிடவே, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பழனி, அவரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

PREV
14
Palanivel and Thangamayil Fight in Court

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 682ஆவது எபிசோடில் கோர்ட் காட்சி ஒளிபரப்பானது. இதில், ஜெயிலிலிருந்து பாண்டியன், சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோரும், மருத்துவனையிலிருந்து கோமதியும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முன்பே அரசி, ராஜீ மற்றும் மீனா ஆகியோர் காத்துக்கொண்டிருக்க முத்துவேல், சக்திவேல் மற்றும் பழனிவேலுவும் கோர்ட்டுக்கு வந்தார்கள். அதே போன்று தங்கமயில், பாக்கியம் மற்றும் மாணிக்கம் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்தனர்.

24
பழனிவேல் மற்றும் தங்கமயில் கோர்ட் காட்சி:

இதில், பழனிவேலுவை பார்த்த மயில், சித்தப்பா என்று கூப்பிடவே, என்னது சித்தப்பாவா? யாருக்கு யார் சித்தப்பா? உனக்கு என்னுடைய அக்கா வீட்டில் என்ன குறை வைத்தார்கள், சரவணன் எம்புட்டு நல்ல பையன், தவம் இருந்தாலும் அவனை மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கமாட்டான். அடிச்சானா இல்ல கொடுமைப்படுத்தினானா, என்ன ஒரு குறை தேவையில்லாமல் காசு செலவு செய்யமாட்டான். மற்றபடி அவன் தங்கம் மாதிரியான ஒரு பையன். 

34
Palanivel and Thangamayil Fight in Court in Pandian Stores 2 Serial

அவன் மீது இப்படி புகார் கொடுத்து வச்சிருக்க, உனக்கு மனச்சாட்சி இல்லையா? ராணி மாதிரி பாத்துக்கிட்டாங்க. அப்படியிருக்கும் போது அவர்களை ஒரு நாள் முழுவதும் ஜெயிலில் வச்சிருக்க, அந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாது. இப்படியே பேசிக்கிட்டு இருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ராஜீ, மீனா மற்றும் அரசி தான் பழனிவேலுவை சமாதானம் செய்து வைத்து கூட்டிச் சென்றார்கள்.

44
கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட சரவணன், பாண்டியன், கோமதி

ஜெயிலிலிருந்து அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்த நிலையில் எல்லோரும் அவர்களிடம் சென்று பேசினர். இதில், எல்லா தப்பையும் செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போன்று மாமா என்று சரவணனை பார்த்ததும் தங்கமயில் நாடகம் ஆடினார். மேலும், அப்போது கூட அவரது அம்மா சொல்வதைத்தான் கேட்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories