அய்யனார் துணை சீரியலில் நடேசனிடம் தரக்குறைவாக பேசி சண்டை போட்ட பல்லவனுக்கு பளார் என அறைவிட்டிருக்கிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பல்லவன், நடேசனின் சட்டையை பிடிச்சு சண்டை போடுகிறார். அவரிடம், யோ... என்னோட அம்மா போனதுக்கு நீதானய்யா காரணம் என சொல்வதோடு, அவரை மரியாதைக் குறைவாக பேசுகிறார். பல்லவனின் இந்த செயலால் கடும் கோபம் அடையும் நிலா, உடனடியாக பல்லவனை இழுத்து பளார் என ஒரு அறைவிடுகிறார். இதையடுத்து நடேசன் உடன் சண்டை போடுவதை நிறுத்துகிறார் பல்லவன். அவரை இனிமே யாராச்சும் மரியாதை இல்லாம பேசுனீங்கனா நடக்குறதே வேற என நடேசனுக்காக சண்டைபோடுகிறார் நிலா.
24
வீட்டை விட்டு வெளியேறும் பல்லவன்
வேண்டுமென்றால் நீங்கள் வீட்டை விட்டு போங்க, அவரை யாரும் திட்டவோ, சண்டையோ போடக் கூடாது என ஒரேபோடாக போடுகிறார் நிலா. நடேசனுக்காக ஏன் நிலா இப்படி சண்டைபோடுகிறார் என எல்லோருமே அதிர்ச்சி அடைகிறார்கள். நிலா அடித்ததால் கோபமடையும் பல்லவன், நான் இனிமே வீட்டுக்கே வரமாட்டேன் என கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அவனை அவருடைய அண்ணன்கள் தடுக்க பார்க்கிறார்கள். ஆனால் நிலா அவர்களை தடுத்து நிறுத்தி, அவன் எங்க போயிட போறான், வந்திடுவான். நீங்க யாரும் அவனை தேடி போகாதீங்க என சொல்கிறார்.
34
பாலோ பண்ணும் நடேசன்
நிலா போட்ட கண்டிஷனால் யாரும் பல்லவனை தேடி செல்லாமல் வீட்டிலேயே, இருந்துகொண்டு, அவன் எப்போ வருவான் என காத்திருக்கிறார்கள். வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்ற பல்லவன், நேராக டீக்கடைக்கு சென்று, அங்கு அருகே இருக்கும் கல்லில் அமர்ந்திருக்கிறார். பின்னர் நடேசன் பல்லவனை தேடிச் செல்கிறார். அவன் டீக்கடை அருகே அமர்ந்திருப்பதை நடேசன் கண்டுபிடித்துவிடுகிறார். அவனிடம் நேராக சென்று பேசினால் மீண்டும் பிரச்சனை வரும் என்பதால், அவனே கிளம்பி வீட்டுக்கு வரும் வரை நாம் இங்கேயே அமர்ந்திருக்கலாம் என முடிவெடுக்கிறார் நடேசன்.
இரவாகியும் பல்லவன் வீட்டுக்கு வராததால் அனைவரும் பதற்றம் அடைகிறார்கள். இதையடுத்து அவனுடைய அண்ணன்கள் பல்லவனுக்கு போன் போடுகிறார்கள். ஆரம்பத்தில் எடுக்காத பல்லவன், பின்னர் எடுத்து நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கோபமாக பேசிவிட்டு போனை கட்பண்ணிவிடுகிறார். இதையடுத்து நிலா, பல்லவனுக்கு போன் போட்டு, நீ இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வரணும், இல்லேனா நானே நேர்ல வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வீட்டைவிட்டு கிளம்பிடுவேன் என சொல்ல, பயந்து பல்லவன் வீட்டுக்கு வந்து வாசலிலேயே இருக்க, அவனை உள்ளே அழைத்து வந்து அட்வைஸ் பண்ணுகிறார் நிலா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.