எல்லா உண்மையையும் சொன்ன மீனா... ரோகிணிக்கு வில்லனாக மாறும் முத்து..? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Nov 21, 2025, 09:46 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, தான் மீனா டல் ஆக இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாக சொல்ல, ரோகிணி பதறிப்போகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் குடும்பத்தினரிடம் அதை சொல்ல முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியால் செம அப்செட்டில் இருக்கிறார் மீனா. அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதால், அவருக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முனைப்பு காட்டும் முத்து, தன் நண்பனிடம் அவள் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து தான் இப்படி இருக்கிறாள் என்று சொல்ல, அதற்கு அவர், அப்போ ஊரில் தான் ஏதாச்சும் நடந்திருக்கும் என கூறுகிறார். உடனே முத்துவும் ஊரில் ஒரு சாமியாடியை பார்த்ததால் தான் மீனா இப்படி இருக்கிறாள் என சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
முத்துவால் பதறும் மீனா

முத்து வீட்டுக்கு வந்ததும், மீனா இத்தனை நாள் டல்லாக இருப்பதற்கான காரணத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். என்ன நடந்தது என அண்ணாமலை கேட்டதும், அவள் மூடி மறைக்கும் விஷயம் நம்ம பாட்டியோட ஊரில் தான் இருக்கு என முத்து சொன்னதும், ஐய்யயோ நம்மைப் பற்றி தான் இவன் சொல்லப்போகிறானா என வெட வெடத்துப் போகிறார் ரோகிணி. ஊரில் நடந்த ஒரு விஷயத்தால் தான் மீனா இப்படி இருக்கிறாள். அது என்ன விஷயம் என்பதையும் நான் கண்டுபிடித்துவிட்டேன். பாட்டி ஊர்ல மீனா பார்த்த விஷயம் தான் அவளின் இந்த நிலைக்கு காரணம் என முத்து சொல்ல, மீனாவும் பதறிப்போகிறார்.

34
உண்மையை உடைத்த முத்து

இவருக்கு எப்படி உண்மை தெரிஞ்சிருக்கும் என மீனா மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்க, உண்மையை நான் சொல்லவா இல்லை நீயே சொல்றியா என முத்து கேட்க, இவரு என்ன சொல்றாருனு எனக்கு புரியல என மீனா சொன்னதும், சரி நானே சொல்கிறேன் என முத்து தான் கண்டுபிடித்த விஷயத்தை சொல்கிறார். நம்ம ஊருக்கு சென்றபோது கோவிலில் மீனாவிடம் வந்து ஒரு சாமியாடி அவளை ஊரைவிட்டே போயிடு என சொன்னார். அதனால் தான் மீனா பயந்து இருக்கிறாள். அவன் பேசுனதில் ஏதாவது அர்த்தம் இருக்குமோ என நினைத்து பயந்துபோய் இருக்கிறாள் என சொல்கிறார் முத்து.

44
சிந்தாமணிக்கு ஆப்பு

பின்னர் மீனாவை ஒரு பெண் சாமியாரிடம் அழைத்து சென்று அவளுக்கு மந்திரித்த கயறு ஒன்றை கட்டிவிடுகிறார் முத்து. அப்போது அங்கு வரும் சிந்தாமணி, தன்னுடைய பெண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும் என அந்த பெண் சாமியாரிடம் கேட்க, அதற்கு அவர் சீக்கிரமே நடக்கும், அதுவும் உன்னுடைய விருப்பம் இல்லாமல் நடக்கும் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதுமட்டுமின்றி உன்னுடைய பொண்ணு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் கூறுகிறார். இதனால் சிந்தாமணி குழம்பிப் போகிறார். 

இரவில் முத்துவிடம் ரோகிணியை பற்றிய உண்மையை முத்துவிடம் கூறிவிடுகிறார் முத்து. ரோகிணி தான் கல்யாணி என்றும், கிரிஷ் அவருடைய பையன் தான் என்றும் மீனா சொன்னதை கேட்டு முத்து ஷாக் ஆகிறார். அநேகமாக இது கனவாக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories