வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Apr 25, 2026, 09:33 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனை அடைப்பதற்காக முத்துவும், மீனாவும் ஓடி ஓடி உழைக்க ஆரம்பிக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக வீட்டை விஜயா யாருக்கும் தெரியாமல் அடமானம் வைத்திருந்த நிலையில், தற்போது பைனான்சியர் அந்த காசை கேட்டு வீட்டுக்கு வந்ததோடு மனோஜூம் விஜயாவும் சேர்ந்து அண்ணாமலையின் கையெழுத்தை போட்டு வீட்டு பத்திரத்தை தன்னிடம் கொடுத்து அடமானம் வைத்து 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய விஷயத்தை போட்டு உடைக்கிறார். அதுமட்டுமின்றி அந்த கடன் தொகையை மூன்று மாதத்தில் திருப்பி செலுத்தாவிட்டால் வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுவேன் என்றும் வார்னிங் கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார். இதை அடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
கடனை அடைக்க பாடுபடும் முத்து, மீனா

மனோஜ் வாங்கிய கடனுக்காக முத்துவும் மீனாவும் சாட்சி கையெழுத்து போட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் அந்தப் பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைக்க ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மீனா தன்னிடம் இருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து அதன்மூலம் ஒன்பது லட்சம் ரூபாயை திரட்டி இருக்கிறார். பணத்தை வேகமாக சேர்க்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் உழைக்கிறார் பீனா ஏராளமான இடங்களில் பூ ஆர்டர் எடுத்து அதனை டெலிவரி செய்து வருகிறார். மறுபுறம் முத்துவும் இரவு பகல் பாராமல் கார் ஓட்டி சம்பாதித்து வருகிறார்.

35
மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

இந்த சமயத்தில் மீனாவுக்கு ஒரு குட் நியூஸ் வருகிறது. அவர் தலைமையில் உள்ள பூ வியாபாரிகள் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு நடத்தும் மலர்கண்காட்சிக்கான பொறுப்பை கவனித்துக் கொள்ள ஆர்டர் வருகிறது. அதனை நல்லபடியாக முடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த தகவலை அறிந்த மீனா மிகுந்த சந்தோஷம் அடைகிறார். மறுபுறம் முத்து ஒரு சவாரியை இறக்கி விட சென்றபோது அங்கு வடை இருப்பதை பார்த்து சாப்பிட ஆசைப்படுகிறார். பின்னர் நமக்கு வீட்டுக் கடனை அடைப்பது தான் முக்கியம் என முடிவெடுத்து தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

45
மனோஜுக்கு டோஸ் கொடுக்கும் விஜயா

இப்படி தாங்கள் வாங்காத கடனுக்காக முத்துவும் மீனாவும் ஓடி ஓடி உழைக்கும் நிலையில் மறுபுறம் கடனை வாங்கிவிட்டு எந்தவித கவலையும் இன்றி சுற்றிக் கொண்டிருக்கும் மனோஜ் வீட்டிற்கு சுட சுட பிரியாணி வாங்கி வந்து சாப்பிடாமல் இருக்கிறார். இப்படி அவர் கடனைப் பற்றி கவலைப்படாமல் சுற்றுவதை பார்த்து கடுப்பான விஜயா இந்த நேரத்தில் உனக்கு பிரியாணி தான் ஒரு கேடா என கேட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கிறார். இங்கே நானே வீடு பறிபோயிடும்னு கவலையில் இருக்கேன் நீ என்னடான்னா துளியும் கவலையில்லாமல் இப்படி சுத்திக்கிட்டு இருக்க உன்னை போய் நம்பி நானும் ஏமாந்துட்டேனே என புலம்புகிறார் விஜயா.

55
என்ன நடக்கும்?

அனேகமாக இந்த மூன்று மாதத்திற்குள் முத்துவும் மீனாவும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் அந்த பைனான்சியர் வீட்டை ஏலம் விட தொடங்கும் போது முத்து தன்னுடைய டிராவல்ஸ் வேலை விற்று அந்த பணத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சிந்தாமணியும் மீனாவின் தலைவி பதவியை பறிக்க பல்வேறு சதித்திட்டம் தீட்டி வருகிறார். அவருக்கு உடந்தையாக ரோகிணியும் இருக்கிறார். இதனால் முத்துமீனாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் காத்திருக்கின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories