சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் முத்துவை பற்றி இழிவாக பேசிய நீத்துவுக்கு கன்னத்தில் பளார் என அறைவிழுந்துள்ளது. அதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் தேர்தலில் தோற்ற கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, தலைவிரிகோலத்தில் அமர்ந்துகொண்டு, ரோகிணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த மீனாவை நான் சும்மா விடமாட்டேன். எலெக்ஷனில் ஜெயிச்சா என்ன, என்னோட ஆளுங்களை வைத்து அவளை இந்த தலைவர் போட்டியில் இருந்தே ஓட வைக்கிறேன் என சபதம் எடுக்கிறார். பணம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை. பணத்தை வைத்து, அவளை இந்த சங்கத்தில் இருந்தே தூக்குறேன் பாரு. மறுபடியும் எலெக்ஷன் வரவைத்து நான் அன்னபோஸ்டா ஜெயிப்பேன் என ரோகிணியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் சிந்தாமணி.
25
பிரச்சனை பண்ணும் நீத்து
மறுபுறம் மீனாவும், முத்துவும் பிளான் பண்ணி ஸ்ருதியையும், ரவியையும் டூர் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் டூர் போயிட்டு வரும் வரை முத்துவும், மீனாவும் தான் ரெஸ்டாரண்டை பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். மறுநாள் முத்துவும், மீனாவும், ரெஸ்டாரண்டை கவனித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நீத்து வருகிறார். அவர் ரவி எங்கே, போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான். இன்னைக்கு நான் என்னோட பூக்கடையை ஓபன் பண்ணுறேன். அவன் இல்லாம நான் எப்படி கடை திறப்பு விழாவை நடத்த முடியும். அவனை எங்க மறச்சு வச்சிருக்கீங்க, வரச்சொல்லுங்க என கூறுகிறார்.
35
அறைவிட்ட மீனா
ரவி இங்கே இல்லை என்று முத்துவும் மீனாவும் சொல்கிறார்கள். அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் நீத்து இல்லாததால், கோபமடையும் மீனா, அவரை செம திட்டு திட்டுகிறார். ஏண்டி இப்படி அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே, ஒழுங்கு மரியாதையா, வாழத் தெரியாத என சொன்னதும், நீத்து முத்துவை பற்றி அவதூறாக பேசுகிறார். உன் புருஷன் மட்டும் என்ன ஒழுங்கானவனா, அவன் ஒரு ரெளடி தான என சொன்னதும் செம கோபமடைந்த மீனா, நீத்துவுக்கு கன்னத்திலேயே பளார் என அறைவிடுகிறார். என்னைய இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டேல்ல, உன்னை சும்மா விடமாட்டேன் என சொல்லிவிட்டு நீத்து அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபுறம் மனோஜ் கோர்ட்டில் தொடர்ந்த டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் இந்த முறை தன்னுடைய மகன் கிரிஷை தன்னுடன் அழைத்து செல்கிறார் ரோகிணி. கோர்ட்டிற்கு வரும் மனோஜ், நீதிபதியிடம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணியோ, பயங்கரமா, டிராமா பண்ணி அழுது சீனைபோட்டு, இவரால நான் நிறைய கடன் வாங்கி வச்சுட்டேன். எனக்கு குழந்தை வேற இருக்கு, இப்போ டைவர்ஸ் கொடுத்துட்டா நான் என்ன பண்ணுவது என கூறி கண்ணீர் சிந்துகிறார். இதையடுத்து நீதிபதி, இந்த டைவர்ஸ் கேஸை 6 மாதத்திற்கு தள்ளிவைப்பதாக சொல்கிறார்.
55
மனோஜுக்கு செக் வைக்கும் ரோகிணி
அதுமட்டுமின்றி இந்த ஆறு மாதமும் ரோகிணிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மனோஜ் கொடுக்க வேண்டும். உங்களுக்கு சம்மதம் என்றால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நீதிபதி ஒரே போடாக போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. ரோகிணிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க மனோஜ் சம்மதிப்பாரா? ரோகிணியின் இந்த டிராமாவிற்கு மனோஜ் செவி சாய்ப்பாரா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும். அதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.