Pandian Stores 2 Serial 03 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தை பாண்டியனிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமாருக்கு தங்கமயிலின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க சக்திவேல் முடிவெடுத்துள்ளார். இந்த விஷயத்தை பழனி, பாண்டியன் குடும்பத்திடம் சொல்ல அதைக் கேட்டு அனைவரும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். இந்த சம்பந்தம் குமாருக்கு வேண்டாம் என சொல்லுமாறு பழனியிடம் சரவணன் சொல்ல, அதற்கு அவர் நான் சொன்னால் கேட்கிற மனநிலையில் அவர்கள் இல்லை என கூறுகிறார். பின்னர் பாண்டியன் இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என சொல்லி விடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஆஸ்பத்திரியில் இருந்து வந்து டையர்டாக இருக்கும் மீனாவை ரூமுக்குள் சென்று ரெஸ்ட் எடுக்க சொல்கிறார் பாண்டியன். அப்போது செந்திலும் மீனாவுடன் ரூமுக்குள் சென்று பேசுகிறார். ஆனால் அவரிடம் பேசாமல் அமைதியாக இருக்கிறார் மீனா. அப்போது செந்தில், வா நம்ம ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கே போயிடலாம் என கூறுகிறார். அதுமட்டுமின்றி லஞ்சம் வாங்குவதெல்லாம் சகஜம் தான் என்பது போல் பேசுகிறார். இதைக் கேட்டு கடுப்பான மீனா, நீ லஞ்சம் வாங்கிய விஷயத்தை உங்க அப்பாவிடம் சொல்லட்டுமா என கேட்க, செந்தில் பதறிப் போகிறார். என்னிடம் நீ பேசினால் கண்டிப்பாக இந்த விஷயத்தை உங்க அப்பாவிடம் சொல்லி விடுவேன் என பிளாக் மெயில் பண்ணுகிறார் மீனா. இதன்பின் கப்சிப் என ஆகிவிடுகிறார் செந்தில்.
35
ஃபீல் பண்ணும் சரவணன்
மறுபுறம் குமாருக்கு தங்கமயில் தங்கச்சியை திருமணம் செய்து கொடுக்க இருக்கும் விஷயத்தை அறிந்து சரவணன் கடும் அப்செட்டில் இருக்கிறார். ரூமில் தூக்கம் வராமல் புலம்பிக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து வாய்ஸ் மெயில் வருகிறது. அந்தப் பெண் தனக்கு அஞ்சலி நம்பர் வேண்டும் என கேட்டு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அப்போது சரவணனுக்கு அஞ்சலியின் ஞாபகம் வருகிறது. அவரிடம் தான் உன்னை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்வேன். ஏமாற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்ததெல்லாம் சரவணனுக்கு ஞாபகம் வருகிறது. அதை நினைத்து தூங்காமல் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் சரவணன்.
மறுபுறம் கதிர் இரவில் எழுந்து பார்த்தபோது ராஜி தூங்காமல் போர்வையை மூடிக்கொண்டு தனியே அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரை அழைத்து என்ன ஆச்சு என கேட்க, நாளைக்கு ரிசல்ட் வருதுல்ல அதனால தான் தூக்கம் வரமாட்டேங்குது என கூறுகிறார் ராஜி. பின்னர் அவரை அழைத்து பேசும் கதிர், ரிசல்ட் நல்லபடியா வரும் வா நம்ம ரெண்டு பேரும் பாட்டு கேட்கலாம் என சொல்லி இருவரும் ஜோடியாக பாட்டு கேட்கிறார்கள். பின்னர் காலை எழுந்ததும் கதிரும், ராஜியும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் பாண்டியனிடம் கோவில் பிரசாதத்தை கொடுக்கிறார் ராஜி. அப்போது என்னப்பா ஏதாச்சு விசேஷமா என கேட்கிறார் பாண்டியன்.
55
பாஸ் ஆனாரா ராஜி?
உடனே அருகில் இருந்த கோமதி இன்னைக்கு ரிசல்ட் வருதுல்ல அதனாலதான் கோவிலுக்கு போயிட்டு வந்திருப்பா என கூறுகிறார். ரிசல்ட் வரும் விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என முன்கூட்டியே கோமதியிடம் கூறியிருந்தார் ராஜி. ஆனால் அவர் மறதியில் அனைவரிடமும் கூறிவிட்டதால், தற்போது ரிசல்டுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். ரிசல்ட் வந்ததும் கதிர் போனில் செக் பண்ணுகிறார். எதிர்பார்த்தபடியே ராஜி பாஸ் ஆகி விடுகிறார். பின்னர் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து வாழ்த்து பெறுகிறார் ராஜி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.