வெள்ளித்திரை டூ சின்னத்திரை: சொகுசு கார், சொந்த வீடு என கலக்கும் கேப்ரியல்லா! மருமகள் சீரியல் நாயகியின் சொத்து மதிப்பு இதோ!

Published : Feb 19, 2026, 04:05 PM IST

Gabriella Charlton Net Worth Salary Assets Details : வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு, கார் கலெக்‌ஷன்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Gabriella Charlton Net Worth Salary Assets Details :

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். தனுஷ் நடித்த 3 படத்தில், ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக கேப்ரில்லா சார்ல்டன். நடித்திருந்தார். அந்த படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் இப்படத்திற்கு பெற்ற சம்பளம் சில ஆயிரம் கணக்கில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

26
சமுத்திரக்கனி கொடுத்த பட வாய்ப்பு:

'அப்பா' படத்திலும் குட்டி பெண்ணாக நடித்திருந்தார். சிறுவர்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகவும் வெற்றியடைந்தது. அதில் முக்கிய பங்கு கேப்ரில்லா சார்ல்டன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் மெயின் ரோலில் நடித்திருப்பார் ஆகையால் இவருக்கு படத்தில் பல லட்சங்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

36
பிக் பாஸ் சீசன் 4:

அதன்பின் சினிமா பக்கம் வராத இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விடலாம் என்கிற எண்ணத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் டைட்டிலை பெற முடியாது என்று தெரிந்து கொண்ட கேப்ரில்லா, பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் 4 ல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அவருக்கு வாரம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.102 நாட்கள் இந்த வீட்டில் அவர் இருந்தார். இறுதியில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் வெளியேறினார். அவர் மொத்தமாக 15 வாரங்கள் கிட்டத்தட்ட அவர் இருந்திருக்கிறார்.15 வாரத்திற்கு 15 லட்சம் ரூபாயும் இறுதியாக 5 லட்சம் ரூபாயும் எடுத்துக் கொண்டு 20 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கேப்ரியலா.

46
ஈரமான ரோஜாவே:

பிக் பாஸ்க்கு பிறகு அவர் முதன்முதலாக நடித்த சீரியல் ஈரமான ரோஜாவே இதில் அவர் இரண்டாவது ஹீரோயினியாக நடித்திருந்தார்.பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்ற பிறகு இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, இந்த சீரியலில் இவருக்கு நல்ல ஊதியம் கிடைக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகி காவியாவாக நடித்த கேப்ரியல்லா சார்ல்டன் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 20,000 வரை சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56
மருமகள் சீரியல்:

ஈரமான ரோஜாவே சீரியல் முடிந்த பிறகு சன் டிவியில் மருமகள் என்னும் சீரியலில் ஹீரோயினியாக ஆதிரை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கேம்பிரியலா சார்ல்டன்.சீரியல் சம்பளம் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 20,000 முதல் 30,000 வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரங்கள்: இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிராண்ட் புரொமோஷன் செய்வதன் மூலமும் நல்ல வருவாய் ஈட்டுகிறார். இதன் மூலமாக மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. அதே போன்று இவரது மொத்த சொத்து மதிப்பும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

66
வீடு மற்றும் கார்கள்:

வீடு: திருச்சியில் கேப்ரியல்லாவிற்குச் சொந்தமாக ஒரு அழகான வீடு உள்ளது. அண்மையில் தனது திருச்சி வீட்டின் 'ஹோம் டூர்' வீடியோவை வெளியிட்டு, அது தனது தாயார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

கார்: சமீபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான புதிய டாட்டா ஹாரியர் டார்க் எடிஷன் கார் ஒன்றை வாங்கியுள்ளார் கேப்ரியாலா சார்ல்டன் (Tata Harrier Dark Edition).

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories