Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா

Published : Jun 23, 2026, 10:20 AM IST

Siragadikka Aasai serial 23 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், ஜோதிடர் ஒருவரின் பேச்சைக் கேட்டு மனோஜ் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்த டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் அதிகாரிகள், அவருக்கு ஐடி கார்டு கொடுத்ததோடு, அவர் செய்யும் நல்ல விஷயங்களுக்காக பாராட்டுக்களை தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து வயித்தெறிச்சல் படுகிறார் விஜயா. மறுபுறம் முத்துவின் வளர்ச்சியால் மீனாவும், அண்ணாமலையும் செம சந்தோஷத்தில் உள்ளனர். பின்னர் ரூமுக்குள் சென்ற முத்துவிடம், பேசும் மீனா, இந்த அசோசியசனில் உங்களுக்கு பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்

25
மனோஜை சந்திக்கும் ஜோதிடர்

மறுபுறம் மனோஜ் ஷோரூமில் தனியாக அமர்ந்திருக்க, அப்போது அங்கு வரும் ஜோதிடர் ஒருவர், மனோஜிடம், இங்கு ஒரு நெகடிவ் வைபிரேஷன் இருக்கிறது என கூறுகிறார். உடனே மனோஜ், ஜீவா மற்றும் சந்தோஷை பார்க்க, அந்த ஜோதிடர், அந்த நெகடிவ் வைபிரேஷனே நீ தான் என கூறுகிறார். அதைக்கேட்டு ஷாக் ஆன மனோஜ், ஏன் அப்படி சொல்றீங்க என கேட்க், நீ இப்போ ரொம்ப கஷ்டத்துல இருக்க, உன் வாழ்க்கை பின் நோக்கி செல்கிறது என சொல்ல, அதற்கு மனோஜும் ஆமா, அதை சரி செய்ய என்ன செய்யணும் என கேட்கிறார்.

35
பெயரை மாற்ற சொல்லும் ஜோதிடர்

அதற்கு அந்த ஜோதிடர், உங்க பெயர் என்ன என கேட்கிறார். அதற்கு மனோஜ் என சொன்னதும், தன்னுடைய லேப்டாப்பை எடுத்து அதில் நோண்டிவிட்டு, இந்த பெயரால் தான் நீங்கள் இப்படி கஷ்டப்படுகிறீர்கள், முதலில் உங்கள் பெயரை மாத்துங்க எல்லாம் சரியாகிவிடும். ஒரே நாளில் உங்கள் கடையில் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என கூறுகிறார். இதைக்கேட்டதும் குஷியான மனோஜ், என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து, என்னுடைய பெயருக்கு பின்னால் கிருஷ்ணன் என வைத்துக்கொள்ளவா என கேட்கிறார்.

45
மனோஜின் புதுப்பெயர் என்ன?

உடனே அந்த ஜோதிடர், உங்கள் பெயருக்கு முன்னால் தான் ஒரு பெயர் வைக்க வேண்டும். பேசாமல் பப்பரப்பா மனோஜ் என வைத்துக் கொள்ளுங்கள் என அந்த ஜோதிடர் சொல்ல, அதைக்கேட்டதும் மனோஜின் முகம் சுருங்கிப் போகிறது. அதுமட்டுமின்றி இந்த பெயரை தான் இனி எல்லாரும் சொல்ல வேண்டும், அதிலும் முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இந்த பெயரை தான் அழைக்க வேண்டும் என ஜோதிடர் சொல்ல, அதற்கு மனோஜும் ஓகே சொல்கிறார். அருகில் இருந்த ஜீவா மற்றும் சந்தோஷ் இருவரும் இனி நாங்க உங்கள பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்பிடுவோம் என கூறுகிறார்கள்.

55
சத்யா - ரேகாவுக்கு சப்போர்ட் பண்ணும் பாட்டி

மறுபுறம் முத்துவின் பாட்டி வீட்டில் இருக்கும் ரேகா மற்றும் சத்யா இருவரும், அந்த கிராமத்தை சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். அப்போது ஒரு பாலத்தில் நின்று போட்டோ மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார்கள். இதைப்பார்த்த அந்த ஊர் மக்கள் என்ன நடு ரோட்டுல இப்படி பண்ணுறீங்க, வீட்டுக்கு போங்க என சொன்னதோடு, வீட்டுக்கே வந்து பாட்டியிடம் புகார் அளிக்கிறார்கள். இவர்களை பார்த்து எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போக மாட்டார்களா என கேட்க, அதற்கு பாட்டி சத்யா மற்றும் ரேகாவுக்கு சப்போர்டாக பேசி, ஊர்மக்களை விரட்டிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories