எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் போட்ட பிளானை நம்பி சக்தியின் ரூமுக்கு சென்ற கரிகாலன் கையும் களாவுமாக சிக்கி சக்தியிடம் தர்ம அடி வாங்கி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரம் கைமாறியதால், அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்தில் இருந்த சக்திக்கும், ஜனனிக்கும், அந்த லெட்டர் விவகாரம் தான் நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்பதால், அதைவைத்து குணசேகரனை மடக்க பிளான் போடுகின்றனர். மறுபுறம் வீட்டைவிட்டு வெளியேறிய ஆதி குணசேகரன், தான் வெளியூருக்கு சென்று அங்கு தனக்கு எதிராக உள்ள ஆதாரங்களை சக்தி தேடிக் கண்டுபிடிக்கும் முன் அதை அழிக்க சென்றிருப்பதாக கதிரிடம் சொல்கிறார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
திருட வந்த கரிகாலன்
ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரங்களை சக்தியிடம் இருந்து எடுக்க, நள்ளிரவில் கரிகாலனை எழுப்பி, அவனை சக்தி ரூமுக்கு சென்று தேடிப் பார்க்க அனுப்புகிறார் கதிர். தூக்க கலக்கத்தில் சக்தி ரூமுக்குள் முகமூடி அணிந்து சென்ற கரிகாலன், அங்குள்ள கபோர்டில் தேடிக் கொண்டிருக்கும் போது இரு பொருள் தவறி கீழே விழ, சக்தி எழுந்துவிடுகிறார். அப்போது கரிகாலனை மடக்கிப் பிடிக்கும் சக்தி, அவனுக்கு பளார், பளாரென அறைவிடுகிறார். எதுக்காகடா உன்ன அனுப்புனாங்க என கழுத்தை நெரித்து சக்தி கேட்க, அதற்கு தண்ணி குடிக்க வந்ததாக சொல்லி சமாளிக்கிறார் கரிகாலன்.
34
சக்தி - கதிர் வாக்குவாதம்
இதையடுத்து கீழே செல்லும் கதிர், எவனும் வீட்டைவிட்டு வெளிய கிளம்பக் கூடாது. காலையில் இதற்கெல்லாம் நீங்க பதில் சொல்லணும், இல்லேனா ஒருத்தனையும் வெளிய விடமாட்டேன் என்று கத்துகிறார். கிளம்புற விஷயம் வரை இவனுக்கெப்படி எல்லாம் தெரிஞ்சிருக்கு என ரேணுகா கேட்க, அது தெரிந்தாலும் பரவாயில்லை, இவனுங்களால் எதுவும் பண்ண முடியாது என சொல்கிறார் சக்தி. இதையடுத்து அனைவரும் தூங்கச் செல்கிறார்கள். மறுநாள் காலையில், நந்தினி, தனது மகளுக்காக தீபாவளிக்கு எடுத்த துணிகளை ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார்.
அப்போது தர்ஷனுக்கு தல தீபாவளி கொண்டாட உள்ள விஷயத்தை விசாலாட்சியிடம் சொல்கிறார். அதைக்கேட்ட விசாலாட்சி, அப்பன், ஆத்தா இல்லாதவளுக்கு தல தீபாவளி வேறயா என கேட்க, அதனால் கடுப்பான ஜனனி, பார்கவியை பத்தி எதாவது பேசுனீங்க, அப்புறம் நடக்குறதே வேற என மிரட்ட, இதற்கெல்லாம் அசராத விசாலாட்சி, தன் மகன்கள் கதிர் மற்றும் ஞானத்திடம், இவங்களுக்கு போட்டியா நம்மளும் தீபாவளியை கொண்டாடுவோம் என சொல்கிறார். இப்படி இருதரப்பும் போட்டிபோட்டு தீபாவளியை கொண்டாட உள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.