Karthik Secret Plan against Chandrakala : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சந்திரகலா போடும் பிளான் எல்லாம் தோல்வியும் முடியும் நிலையில் இப்போது என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
Karthigai Deepam Serial Today Episode and Highlights
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இதில், தனது அக்காவை எப்படியாவது நடுத்தெருவிற்கு கொண்டு வர வேண்டும், அக்கா இருக்கும் வீட்டை தான் ஆட்டைய போட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக தனது கணவருடன் சேர்ந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு டிராமாவாக நடத்துகிறார். ஆனால், எதிலேயும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இப்போது ரோகிணியை வைத்து ஒரு டிராமா போட்டுள்ளார்.
25
Rohini at Hospital
அதாவது, ரோகிணிக்கு குழந்தை பிறந்தால், பிரிந்திருந்த சாமுண்டீஸ்வரி மற்றும் பரமேஸ்வரியின் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும். இதுதான் உண்மை. இதை சந்திரகலா தனக்கு சாதகமாக் பயன்படுத்திக் கொண்டு ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று கூறி டிராமா போடுகிறார். இதை தெரிந்து கொண்ட ரோகிணி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் சொல்லாமலே இருந்தார். ஆனால், மருத்துவமனையில் வைத்து ரோகிணி மற்றும் ரேவதி இருவரும் பேசுவதை கேட்ட சந்திரகலா, தனது அக்காவை கூட்டிக் கொண்டு வந்து கண்ணெதிரே என்ன நடக்கிறது என்பதை காண்பித்துள்ளார்.
35
Rohini and Mayilvaganam
பின்னர் ரோகிணியிடம் இதைப் பற்றி விசாரிக்க, அவரோ தனது அம்மா ஸ்தானத்திற்கான அடையாளத்தை பற்றியும், ஆசையைப் பற்றியும் தெளிவாக கூறினார். எனினும், கார்த்திக் ஜோதிடரை அழைத்து ரோகிணியின் ஜாதகம் பார்க்க அந்த ஜோதிடரோ ரோகிணிக்கு குழந்தை பிறந்தா ள் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்று கூறினார்.
45
Rohini Ready To Abortion
இதற்கேற்க சாமுண்டீஸ்வரிக்கு கார் விபத்து ஏற்படச் செய்தனர். இதில் தலையில் காயமடைந்த நிலையில் வீட்டிற்கு வந்த சாமூண்டீஸ்வரியை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோகிணி தான் கர்ப்பமாக இருப்பதால் தான் அம்மாவிற்கு இப்படி நடக்கிறது என்று கூறி கருவை கலைக்க சென்றார். இதற்கிடையில் ஜோதிடர் டிராமா செய்தார் என்பதை புரிந்து கொண்ட கார்த்திக், ரோகிணியின் ஜாதகத்தை கையில் கொண்டு வந்து ஒருவரிடம் கொடுத்து ஜாதகம் பார்க்க சொன்னார். அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த சந்திரகலா அதிர்ச்சியடைந்தார்.
55
Karthigai Deepam Serial
அப்போது ஜோதிடர், இந்த ஜாதகருக்கு குழந்தை பிறந்தால் ராஜயோகம் உண்டாகும். அப்படி இப்படி என்று பேசவே, அனைவரும் உண்மையை புரிந்து கொண்டனர். இதற்கிடையில் தன்னால் தான் தனது அம்மாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கருதிய ரோகிணி கருவை கலைக்க மருத்துவமனை சென்றுள்ளார். அடுத்து என்ன நடக்கிறது என்பது குறித்து நாளைய எபிசோடில் பார்க்கலாம்.