Karthigai Deepam Highlights: தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணிய ரோகிணி - கார்த்திக் கொடுக்கப்போகும் லவ்வர்ஸ் டே சர்ப்ரைஸ்!

Published : Feb 14, 2026, 10:14 PM IST

Karthik Valentines Day Surprise Ideas : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1123 ஆவது எபிசோடில் லவ்வர்ஸ் டே கொண்டாட்டத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஈடுபட்டனர்.

PREV
16
Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம் சீரியலில் காதலர் தின கொண்டாட்டத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஈடுபட்டுள்ளனர். கார்த்திக் மற்றும் ரேவதி இருவரையும் பிரித்து கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்துவேன் என்று சந்திரகலா சபதம் எடுத்துள்ளார். இதையே நினைத்துக் கொண்டிருந்த ரேவதிக்கு ரோகிணி அட்வைஸ் செய்தார். அது என்ன என்று பார்க்கலாம். இன்றைய 1123ஆவது எபிசோடில் ரேவதி ரூமுக்கு வந்த ரோகிணி நாளைக்கு என்ன நாள் என்று கேட்க, அதைப்பற்றி எதையும் யோசிக்காமல் இருந்த ரேவதியிடம், நாளைக்கு லவ்வர்ஸ் டே. 

26
Karthik Valentine's Day surprise ideas

இப்போதுதான் நீயும் கார்த்திக்கும் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். அதனால், கார்த்திக்கிற்கு பிடித்தவற்றை வாங்கி கொடுத்து அசத்து என்றார். மேலும், நான் சொல்ல கூடாது. ஏனென்றால் நான் உன்னுடைய அக்கா. அதனால், நீ என்ன நினைக்கிறயோ அதையே பண்ணு என்று அட்வைஸ் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே கார்த்திக் லவ்வர்ஸ் டே கொண்டாட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இதைப் பற்றி மயில்வாகனத்திடம் சொல்லவே அவர் சந்தோஷப்படார். மயில்வாகனம் ரோகிணிக்கு சொல்ல, ரோகிணி சுவாதிக்கு சொன்னார். 

36
Karthigai Deepam Serial Twist Today

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தெரிந்து கொண்டு அனைவரும் சந்தோஷப்பட்டனர். மேலும், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து கார்த்திக் ரேவதியை கூட்டிக் கொண்டு சர்ஃப்ரைஸூக்கு ஏற்பாடு செய்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு சென்றார். செல்லும் வழியில் ரேவதி என்ன சர்ஃப்ரைஸ் என்ன சர்ஃப்ரைஸ் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், கார்த்திக் அதைப் பற்றி சொல்லவே இல்ல, பின்னர் ரேவதி தனக்கு எப்படியெல்லாம் நடந்தால் சந்தோஷமாக இருக்குமோ அதையெல்லாம் சொன்னார்.

46
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

அதில் முதலாவது; மலைப்பகுதிக்கு சென்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் ஆனால், எனக்கு பிறந்தநாள் இல்லை. அதனால், இன்று அது நடக்க வாய்ப்பில்லை. அடுத்ததாக திருச்செந்தூர் கூட்டத்தில் நான் தொலைந்து போக பின்னர் மைக்கில் தெரிவிக்க வேண்டும். என்னை கண்டுபிடித்த பிறகு ஓடி வந்து கண்டிப்பிடித்து எங்கடி போன லூசு என்று கேட்க வேண்டும் என்றார். கடைசியாக குழந்தை பிறந்த போது முதலில் யாரை பார்க்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்கும் போது என்னுடைய அம்மா, அவர்களை நினைத்துக் கொள்வார்கள். 

56
ரோகிணி கொடுத்த அட்வைஸ்

ஆனால், நான், கார்த்திக்கை பார்க்க வேண்டும் என்று டாக்டரிடம் சொல்ல வேண்டும் என்றார். ஆனால், இதெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லை. சர்ஃப்ரைஸ் என்ன என்று சொல்லு என்று வாடா போடா என்று பேச ஆரம்பித்தார். பின்னர் ஹோட்டலுக்கு சென்ற போது அவருக்காக புதிதாக வாங்கப்பட்ட டிரெஸை கொடுத்து அணிந்து வர சொன்னார். அந்த புதிய டிரெஸில் ரேவதியை பார்த்த கார்த்திக் அப்படியே சொக்கிப் போய் நின்னார்.

66
கார்த்திக் ரேவதி காதலர் தின கொண்டாட்டம்

இந்த டிரஸ் எப்படி இருக்கிறது? நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் ரேவதி கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு கார்த்திக் ரொம்பவே சிம்பிளாக நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. வேலண்டைன்ஸ் டே சர்ஃப்ரைஸாக ரேவதிக்கு கார்த்திக் என்ன பரிசு கொடுத்தார் என்று வரும் 16ஆம் தேதிக்கான எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories