Karthigai Deepam Serial Highlights in Tamil: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். சிலை திறப்பு விழாவில் சாமுண்டீஸ்வரி கலந்து கொள்வாரா, சிவனாண்டி வைத்த வெடிகுண்டு வெடிக்குமா என்று பார்க்கலாம்.
மத்திய அமைச்சர் சிலை திறப்பு விழா, Union Minister in statue opening function,
கார்த்திகை தீபம் சீரியலில் இப்போது கார்த்திக்கின் கனவு நிறைவேறுமா என்பது பலரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தனக்கு அம்மா கொடுத்த இடத்தில் அவரது சிலையை திறந்து ஆதரவற்றோருக்கு விடுதி கட்ட கார்த்திக் முன் வந்துள்ளார். இதற்கான அந்த இடத்தை சுத்தம் செய்து, அம்மாவின் சிலையையும் வைத்துள்ளார். சிலை திறப்பு விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
25
கார்த்திகை தீபம் சீரியல் டுவிஸ்ட், Karthigai Deepam serial twist Tamil,
சிலை திறப்பு விழாவில் தனது அத்தை சாமூண்டீஸ்வரி கலந்து கொண்டு அவரது கையால் தான் சிலையை திறக்க வேண்டும் என்று கார்த்திக் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், சாமுண்டீஸ்வரி இதற்கு முடியாது என்று மறுப்பு தெரிவிக்கவே, கார்த்திக் தனது சின்ன அத்தையான சந்திரகலாவிடம் சபதம் போட்டார். அதாவது, சிலை திறப்பு விழாவில் அத்தை கலந்து கொள்வார். கண்டிப்பாக அத்தை கையால் தான் சிலை திறக்கப்படும் என்று கார்த்திக் நம்பிக்கையோடு கூறினார்.
35
சிவனாண்டி மற்றும் சாமுண்டேஸ்வரி, Shivaanandi and Chamundeswari villainy,
சிலை திறப்பு விழாவில் கார்த்திக், ரேவதி, ராஜராஜன், ரோகிணி, மயில்வாகன், சுவாதி, கார்த்திக்கின் சகோதரர் மற்றும் ஊர் மக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரலா மற்றும் சாமுண்டீஸ்வரி மட்டுமே இன்னும் கலந்து கொள்ளவில்லை. சிலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரை சாமுண்டீஸ்வரி தான் வரவேற்கிறார் என்று ஊர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
45
சீரியல் சிலை திறப்பு விழா காட்சிகள், Statue inauguration scenes in serial,
சிலை திறப்பு விழாவிற்கான நேரம் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில், சாமுண்டீஸ்வரி வராததால் ஊர் பெரியவர்கள் நேரடியாக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்தனர். அம்மா, நீங்கள் தான் கிராமத்து தலைவர். அதனால், நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக நிற்க வேண்டும் என்றனர். மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அம்மா, எங்களது கட்சியில் தான் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது மத்திய அமைச்சர் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரை நீங்கள் தான் வரவேற்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனையாகிவிடும். ஆதலால், உடனே வாருங்கள் என்றனர்.
55
ஜீ தமிழ் கார்த்திகை தீபம் ஸ்பாய்லர், Zee Tamil Karthigai Deepam spoiler,
ஊர் பெரியவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பேசியதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரகலாவிற்கு இது பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிலை திறப்பு விழாவில் வெடிகுண்டு வேறு வைக்கப்பட்டுள்ளது. இனி, நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.