Chandrakala Sketch Against Karthik Revathi Surrender in Police: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை வீழ்த்த சந்திரகலா ரகசியத் திட்டம் தீட்ட, எதிர்பாராத விதமாக ரேவதி போலீசில் சரண்டர் ஆன நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி ஹைலைட்சாக பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியலில் புதையல் நகைகளை காணவில்லை என்று ஊரார் பலவிதமாக பேச ஆரம்பித்த நிலையில் ஒருவர் மட்டும் சாமுண்டீஸ்வரியின் அம்மா கோயில் நகைகளை திருடி மாட்டிக்கிட்டாங்க. இப்போது அவரது மகள் புதையல் நகைகளை திருடிட்டாங்க. அம்மாவுக்கு புள்ள தப்பாக பிறந்திருக்கு என்று சொல்லவே கோபம் கொண்ட சாமுண்டீஸ்வரி எங்க அம்மா கோயில் நகைகளை திருடவில்லை. நானும் புதையலை எடுக்கவில்லை. நான் எடுக்கவில்லை என்பதற்கு இந்த ஆத்தாவே சாட்சி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
26
புதையலை திருடிய யார்
எனினும் ஊர் ஜனங்கள் ஒட்டு மொத்தமாக அவர் தான் திருடிய தான் பேசவே, ஊர் பெரியவர்கள் என்ற முறையில் ஒரு சிலர் அவருக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். அப்படி இல்லை என்றால் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த புதையல் திருடு போனது தெரியவர, சந்திரகலா வழக்கம் போல் எல்லாவற்றிற்கும் காரணம் கார்த்திக் தான் என்று சொல்லவே குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.
36
கார்த்திக்கிற்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர்
ரேவதி, ராஜராஜன், மயில்வாகனம் என்று எல்லோருமே கார்த்திக்கிற்கு சாதகமாக பேச, வீட்டு வேலைக்கார அம்மாவை கோயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு கேமராவை ஆஃப் செய்து வைத்து விட்டு புதையல் நகைகளை திருடிட்டான் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார். அப்போது சிவனாண்டி ஊர் மக்களை திரட்டி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வரவே, அவர் கார்த்திக் தான் எடுத்தார் என்று சாட்சியோடு நிரூபித்தார்.
46
அக்காவை அவமானப்படுத்த சந்திரகலா போட்ட பிளான்
இதை கார்த்திக் மறுத்த நிலையில் சாமுண்டீஸ்வரி அவன் தான் எடுத்தான் என்று வீழ் பழி போட்டார். கார்த்திக் எடுக்கவில்லை என்று சொல்ல இப்படி இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு 2 நாட்கள் தான் கால அவகாசம் என்று சொல்லிவிட்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்லவே அவர்களுக்கு பின்னால் தொல்லியல் துறை அதிகாரிகள் போலீசாருடன் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்தனர்.
56
கார்த்திக்கை மாட்டிவிட்ட சந்திரகலா
அவர்களும் புதையல் நகை திருடு போய்விட்டது. அதை திருடியது இவன் தான் என்று கார்த்திக்கை சொல்லவும், ரேவதி தானாக வந்து நான் தான் எடுத்தேன் என்றார். இருவரும் மாறி மாறி நான் எடுத்தேன் என்று சொல்ல கடைசியில் ரேவதி எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கு என்று சொல்லி நான் தான் எடுத்தேன் என்று போலீசில் ஒப்புக் கொண்டு ஜீப்பில் ஏறிவே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால் ஹேப்பியான சந்திரகலா தனது கணவருக்கு போன் போட்டு நாம் நினைத்தது நிறைவேறிவிட்டது. இதோடு நிற்காமல் பத்திரிக்கை, மீடியா என்று அக்காவின் பெயரை போட்டு அவரை இன்னும் அவமானப்படுத்த வேண்டும் என்றார். அதற்கு சிவனாண்டியும் அப்படியே செய்கிறேன் என்று சொல்வோதோடு கார்த்திகை தீபம் சீரியலில் 1137ஆவது எபிசோடு முடிந்தது.
66
தானாக சரண்டரான ரேவதி
சந்திரகலா, தான் யார் என்று காட்டிய நிலையில் இனிமேல் தான் கார்த்திக்கின் உண்மையான முகத்தை சந்திரகலா பார்க்க போகிறார். உண்மையாக புதையல் நகைகளை திருடியது யார் என்று கண்டுபிடித்து ரேவதியும், சாமுண்டீஸ்வரியும் புதையல் நகைகளை திருடவில்லை என்பதை கார்த்திக் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.