கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?

Published : Mar 03, 2026, 10:02 PM IST

Chandrakala Treasure Box Swap Blunder Mistake in Karthigai Deepam Serial 1136 Episode Highlights in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் உள்ள மிகப்பெரிய தவறு என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Karthigai Deepam Serial Logic Mistake Treasure Box

கார்த்திகை தீபம் சீரியலில் 1136ஆவது எபிசோடில் ஒரு பெரிய தவறு உள்ளது. அதாவது, சந்திரகலா புதையலை எடுத்து தனது பேக்கில் வைத்த பிறகு அவர் ரூம் கதவை லாக் செய்துவிட்டு தான் அங்கிருந்து செல்வார். ஆனால், அடுத்த நாள், கோயிலில் வைத்து புதையல் பானையை திறந்து பார்த்த போது அதில் வெறும் கற்களாக இருந்துள்ளது. அது எப்படி வந்தது தான் கேள்வியாகவும், பெரிய பிழையாகவும் உள்ளது. அதைப்பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
Chandrakala Treasure Box Swap Blunder

ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். ஒன் மேன் ஷோவாக கார்த்திக்கை வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த மாஸ் வரவேற்பைத் தொடர்ந்து இப்போது அடுத்த பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே ரோகிணி கர்ப்பமாக இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் வேறு ஏதாவது சீன் இல்லாமல் சாமுண்டீஸ்வரியை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவும், கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்துவதற்காகவும் கோயில் புதையல் காட்சிகள் இடம் பெற்றன.

36
Karthigai Deepam Serial Today Episode 1136 Highlights

கோயில் வளாகத்தில் புதிதாக சன்னதி கட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குழி தோண்டிய போது அந்த இடத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பற்றி சாமுண்டீஸ்வரி தொல்லியல் துறைக்கு தெரியப்படுத்த அவர்களும் அடுத்த நாள் வருவதாக கூறினர். இதற்கிடையில் தான் வீட்டில் வைத்திருப்பதாக கூறி புதையலை தனது வீட்டிற்கு எடுத்து வந்தார் சாமுண்டீஸ்வரி.

46
Zee Tamil Karthigai Deepam Latest News March 2026

அப்போதே கார்த்திக் வார்னிங் கொடுத்தார். ஆனால், அதை சாமுண்டீஸ்வரி காது கொடுத்து கூட கேட்கவில்லை. இந்த நிலையில், தான் ராஜராஜனை மயக்கமடைய செய்வதாக செய்து, அவரை மருத்துவமனையில் அனுமதிக்க செய்து, வீட்டுல் உள்ள அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற போது சந்திரகலா புதையலை எடுத்து தனது மாமா முத்துவேலுவிடம் கொடுத்து மறைத்து வைக்க சொன்னார். மேலும், கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடத்தில் மறைத்து வைக்க செய்தார்.

56
Fans Criticize Karthigai Deepam Serial Director

ஆனால், சந்திரகலா புதையலை எடுக்கும் போது கையில் பேக் மட்டும் கொண்டு சென்றார். மேலும், புதையல் நகைகளை எடுத்து தனது பேக்கில் வைத்துவிட்டு அங்கிருந்த் வெளியில் வைத்து ரூம் கதவை தாழிட்டார். ஆனால், கோயிலில் வைத்து புதையலை திறந்து பார்த்த போது அதில் வெறும் கற்கள் தான் இருந்தது. அதெப்படி வீட்டில் நகைகளை எடுக்கும் போது கற்கள் இல்லை. அதோடு அண்டா மற்றும் பானை இரண்டுமே நகைகளை எடுத்த பிறகு துணியால் மூடப்பட்டிருந்தது.

66
Karthigai Deepam Serial-கார்த்திகை தீபம் சீரியல்

இதெல்லாம் சின்ன சின்ன தவறுகளாக இருந்தாலும் கார்த்திகை தீபம் சீரியல் குழுவினர் இதையெல்லாம் கவனிக்க தவறிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் லாஜிக்கே இல்லாத மிஸ்டேக்காக தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories